சொகுசு ஸ்கார்பியோ காரை.. மொட்டை மாடிக்கே கிரேனில் தூக்கிய பீகார் நபர்! காரணம் கேட்டால் அசந்துடுவீங்க

  • பாட்னா: புதிதாக கார் வாங்குபவர்கள் அதை பத்திரமாக வைத்திருக்க என்னென்ன செய்வார்கள்? வீட்டுக்கு முன்பு நிறுத்துவார்கள், சிசிடிவி கேமரா வைப்பார்கள், அலாரம் பொருத்துவார்கள்.. யாரும் திருடி விடாமல் இருக்க பூட்டு போடுவார்கள்.. ஆனால் பீகாரைச் சேர்ந்த ஒருவர் செய்துள்ள காரியமோ வேற லெவலில் உள்ளது.. திருட்டு பயத்தில் தன்னுடைய புதிய காரை வீட்டின் மொட்டை மாடிக்கே தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விட்டாராம்.. இதுதான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் யாதவ். இவர் சமீபத்தில் Mahindra Scorpio Classic சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். ஆனால், மனோஜ் யாதவ் இஸ்ரேலில் தற்சமயம் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    சொகுசு ஸ்கார்பியோ கார்

    அவர் வெளிநாட்டில் இருந்தபோது, தனது புதிய காரை ஒரு டிரைவரின் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு அந்த டிரைவர் வேலையை விட்டு போய்விட்டார்.. இதனால் காரை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது தொடர்பாக குடும்பத்தினருக்கு கவலையும், பயமும் வந்துவிட்டது.. குறிப்பாக மனோஜ் யாதவ் வெளிநாட்டில் இருப்பதால், வீட்டில் அவரது மனைவி மட்டுமே அந்த வீட்டில் தங்கி இருக்கிறாராம்..

    இதனால் காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்தால் திருட்டு அல்லது சேதம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காரை பாதுகாப்பாக வைக்க வேறு வழி தெரியாத நிலையில், குடும்பத்தினர் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளனர்.

    Advertisement

    மொட்டை மாடியில் கார்

    காரை மொட்டை மாடியில் நிறுத்திவிட்டால் திருட முடியாது என்று நினைத்து, உடனடியாக ஒரு கிரேனை வரவழைத்துள்ளனர். பிறகு புதிய Scorpio காரை கிரேனில் கட்டி, காற்றில் தூக்கி, 2 மாடிகள் உயரத்தில் இருந்த வீட்டின் மொட்டை மாடிக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.. கிரேனில் வைத்து, கார் மொட்டை தூக்கி சென்ற இந்த வித்தியாசமான "பார்க்கிங்" வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், பெரிய SUV ஒன்று கிரேனில் தொங்கியபடி மெதுவாக மேலே கொண்டு செல்லப்படுகிறது.. பிறகு வீட்டின் மொட்டை மாடியில் காரை மிகவும் கவனமாக இறக்கி நிறுத்துகிறார்கள்.. இந்த காட்சியை சுற்றுவட்டாரத்திலிருந்து அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்..

    Advertisement

    கிரேனை மலைத்து பார்த்த பீகார்

    இந்த வித்தியாசமான காட்சியை, அப்பகுதி மக்களே அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இணையவாசிகளும் வியப்புடன் பார்த்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. காரை பார்க்கிங் செய்ய இப்படியொரு ஐடியாவா? Kisht baaki hogi, Bihar hai babu, kuch bhi ho sakta hai என்றெல்லாம் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

    எனினும், ஒரு கனமான SUV காரை மொட்டை மாடியில் நீண்ட நேரம் நிறுத்தும் அளவுக்கு அந்த கட்டிடம் வலுவானதா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த மாடியின் எடை தாங்கும் திறன் குறித்தும் அதிகாரிகள் அல்லது கட்டிட நிபுணர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    Advertisement

    கார் திருட்டை தடுக்க சாதாரணமாகவே எத்தனையோ வழிகள் இருக்கும்போது, காரையே கிரேன் மூலம் வீட்டின் மாடிக்கு தூக்கிச் சென்று பாதுகாத்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது...!!

    English Summary

    Mahindra Scorpio Classic Rooftop Parking.. Bihar Man Lifts New SUV With Crane, The Reason Will Shock You