பாஜகவுக்கு பல்ப் கொடுத்த பங்கிப்பூர்.. இரும்புக் கோட்டையைச் சரித்த பிகே! வென்றதும் சொன்ன மெசேஜ்!

  • பாட்னா: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தான் களம் இறங்கிய முதல் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜன் சூரஜ் கட்சியின் தலைவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர். பாஜக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கையில் வைத்திருந்த இரும்பு கோட்டையை தகர்த்து பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்று இருக்கும் நிலையில், 30 நாட்களில் 30 ஆண்டுகால பாஜகவின் ஆதிக்கத்தை தகர்த்துள்ளதாகவும், பாஜக தலைமைக்கு பீகார் மக்கள் ஒரு முக்கிய செய்தியை இந்த தேர்தல் முடிவு மூலம் தெரிவித்துள்ளதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

    Advertisement

    கடந்த 2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜான் சுரஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. பல தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். தேர்தல் யூக வகுப்பாளராக பல மாநிலங்களில் வெற்றியை பெற்றுக் கொடுத்த பி.கே தனது மாநிலத்தில் வெல்ல முடிய வில்லை என்ற பெரும் விமர்சனத்தை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

    Advertisement

    இந்த நிலையில் பீகார் மாநிலம் பங்கிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. குறிப்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பங்கிப்பூருக்கு டைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    பங்கிப்பூர்

    பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தொகுதியின் எம்எல்ஏவாக பாஜகவின் தற்போதைய தேசிய தலைவர் நித்தின் நபின் இருந்தார். கடந்த 2010 முதல் 2026 வரை அவர் எம்எல்ஏவாக இருந்தார். அதற்கு முன்னர் அவரது தந்தை எம்எல்ஏவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் கடந்த 2025 சட்டமன்ற தேர்தலில் வென்ற நிதின் நபின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    பிரசாந்த் கிஷோர்

    இதை அடுத்து பங்கிப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 2024 ஜன் சூரஜ் கட்சியை ஆரம்பித்து தோல்வி அடைந்த பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டார். சட்டப்பேரவை தேர்தலில் அவர் களம் காண்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளை பெற்ற பிரசாந்த் கிஷோர் தற்போது தேர்தலில் களம் கண்டதால் களம் பரபரப்பானது.

    பாஜக

    இந்த நிலையில் பங்கிப்பூர் தொகுதியில் சுமார் 64,000 வாக்குகள் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா 44 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அர்ஜேடி 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவின் வசம் இருந்த பங்கிப்பூர் தற்போது ஜன் சூரஜ் வசமாகி உள்ளது.

    Advertisement

    தேர்தல் வெற்றி

    இந்த நிலையில் வெற்றி பெற்ற பிறகு பேசி உள்ள பிரசாந்த் கிஷோர்," அடுத்த மூன்று மாதங்களில் பங்கிப்பூர் தொகுதியில் பல மாற்றங்களை மக்கள் காண போகிறார்கள். அதற்கு எனக்கு மூன்று மாத அவகாசம் தேவை. பங்கிப்பூர் மக்கள் மட்டுமல்லாது பீகார் மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நான் இங்கு பெரிய சாதனை எதையும் செய்துவிடவில்லை.

    பாஜக ஆதிக்கம்

    இருந்தாலும் 30 நாட்களில் பாஜகவின் 30 ஆண்டுகால ஆதிக்கத்தை தகர்த்திருக்கிறேன். பாஜகவுக்கு பீகார் மக்கள் ஒரு பாடத்தை புகட்டி இருக்கின்றனர். நல்ல மனிதர் ஒருவரை பீகார் முதல்வராக நாங்கள் அரியணை ஏற்ற போகிறோம் என சொல்லி இருக்கிறார்கள். குற்ற பின்னணி கொண்டவர்கள் இனி பீகாரை வழிநடத்த மக்கள் விரும்பவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்" எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி" எனக் கூறியிருக்கிறார்.

    English Summary

    Prashant Kishor hails Bankipur bypoll win, says Bihar voters ended BJP's 30-year dominance.