சென்னை மதுரை ஹைவேயில் நடுரோட்டில் பற்றி எரிந்த ஆம்னி பஸ்.. அலறியடித்து ஓடிய பயணிகள்!

  • பெரம்பலூர்: சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் பற்றி எரிந்தத்தால் சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் டேங்கில் புகை கிளம்பியதும் பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையில் இருந்து மதுரைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர சர்வீஸ் மட்டுமின்றி பகல் நேரத்திலும் மதுரைக்கு தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது மட்டுமின்றி அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. எப்போதும் பிசியாக உள்ள ரூட்களில் ஒன்றாக இந்த வழித்தடம் உள்ளது.

    Advertisement

    இந்த நிலையில்,தான் நேற்று வழக்கம் போல சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று மதுரைக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்து சென்னை - திருச்சி ஹைவேயில் பெரம்பலூர் அருகே வந்த போது டீசல் டேங்க் அருகே புகை கிளம்பியது. இதை கவனித்த டிரைவர் உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகளை அலர்ட் செய்து கீழே இறக்கிவிட்டார்.

    பேருந்தில் தீ பிடித்ததால் அலறியடித்துக்கொண்டு பயணிகள் அவசர அவசரமாக இறங்கினர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பின்னர் பஸ் முற்றிலும் எரிந்து தீயில் நாசமானது. நல்வாய்ப்பாக பயணிகள் முன்கூட்டியே இறங்கிவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    Advertisement

    ஆம்னி பஸ் தீ விபத்தால் சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். சென்னையில் இருந்து மதுரை சென்ற ஆம்னி பஸ் தீ பற்றி எரிந்தத தகவல் பயணிகளிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகள் முறையாக பாரமரிக்கப்படுகிறதா? என்பதை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    English Summary

    Omni bus travelling from Chennai to Madurai caught fire on the Chennai Madurai National Highway near Perambalur after smoke emerged from its diesel tank. Passengers were evacuated immediately, avoiding casualties. The incident briefly disrupted traffic before firefighters controlled the blaze.