புதுச்சேரி: காங்கிரஸ், தவெகவையும், விஜய், ராகுலையும் யாராலையும எந்த காலத்திலும் பிரிக்க முடியாது எனவும், அன்பின் காரணமாக உருவான கூட்டணி இல்லை, இரண்டு சகோதரர்களால் உருவான கூட்டணி என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் - தவெக இடையேயான நட்பு அடுத்த 50 வருடங்களுக்கான நட்பு எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து இசிஆர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜனா கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா," தமிழ்நாடும், புதுச்சேரியும் ஒன்று தான் பார்டர் தான் வேறு. மாநில அந்தஸ்து பட்டியலிர் புதுச்சேரியை இதுவரை கொண்டுவரவில்லை. வரும் தேர்தலில் புதுச்சேரியில் நமது கூட்டணி அமைக்கும். அப்போது மாநில அந்தஸ்து வலியுறுத்துவோம். காங்கிரஸ், தவெக மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளும் மாநில அந்தஸ்து பெற பாடுபட வேண்டும். புதுச்சேரியிலும் அந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மாநிலத்தை சிங்கப்பூராக்குவேன் என்று சொல்லி, ஓட்டுக்கு 5,000, 10,000 கொடுத்து வெற்றி பெற நினைக்கின்றனர். மக்கள் மனதில் நின்று வெற்றி பெற வேண்டும். இரண்டே பேர் போதும் ஒட்டுமொத்த பண பலத்தையும் தூக்கி எறிய முடியும். அந்த நாள் விரைவில் வரும். காங்கிரஸ், தவெகவையும், விஜய், ராகுலையும் யாராலையும எந்த காலத்திலும் பிரிக்கமுடியாது. அன்பின் காரணமாக உருவான கூட்டணி இல்லை. இரண்டு சகோதரர்களால் உருவான கூட்டணி. புதிய மாற்றத்தை இந்த தேர்தலில் இருந்து தொடங்குவோம். காங்கிரஸ் தோற்று போகிறது என நினைக்கிறீர்களா? தோல்வி வரும் போகும். மீண்டும் எழுவார்கள். நமக்கான நட்பு அடுத்த 50 வருடங்களுக்கான நட்பு. பணபல அரசியலை தூக்கி போடுங்கள். புதுச்சேரி வரலாறு மாறும் போது. அடுத்து 15 ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி ஆட்சி தான் இருக்கும். புதுச்சேரியில் பெரும் தலைவர்கள் தோற்று போவார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் தோற்கவில்லையா, முக்கிய அமைச்சர்கள் தோற்கவில்லையா? தமிழகத்தை போல் புதுச்சேரியும் மாறும். இங்குள்ள முதலமைச்சருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் ஒற்றுமை இல்லாத போது எப்படி வெல்வார்கள். பெண்கள், இளைஞர்களிடம் சொல்லுங்கள், வாக்கு கேளுங்கள்" என்றார்.ஆதவ் அர்ஜுனா
அதற்கு நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். பணத்தை மட்டுமே கொடுத்து, பொருட்கள் கொடுத்து மக்களை மனதை வெல்ல முடியாது. தவெக தனியாக நின்று வெற்றி பெற்றது. திமுக 20 கட்சி கூட்டணி, அதிமுக, பாஜக கூட்டணி அமைத்தனர். தமிழகத்தில் நாங்கள் வென்றது பெண்கள், இளைஞர்களால் தான்.விஜய் ராகுல்
காங்கிரஸ்
கூட்டணி கட்சி