ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி

  • புதுச்சேரி: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியில் உள்ள 4 MLA-க்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைத்து கொண்டது ஜனநாயக படுகொலை. வன்மையாக கண்டிக்கிறோம். முதலமைச்சர் விஜய் மக்கள் விருப்பத்திற்கு எதிராக தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    Advertisement

    இதுவே அதிமுக உட்கட்சி மோதலை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதனைத் தொடர்ந்து, தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
    அவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.

    அதிமுக எம்எல்ஏ

    கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனுக்களும் அளிக்கப்பட்டன. இந்த சூழலில்தான் முதலில் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இசக்கி சுப்பையா

    பின்னர் அவர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
    இதற்கிடையே நேற்று அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அந்த 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 5 தொகுதிகள் காலியாக உள்ளதால், சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 229ஆக குறைந்துள்ளது.

    Advertisement

    அன்புமணி ராமதாஸ்

    அதே நேரத்தில் விஜய்யின் நடவடிக்கைகளுக்கு திமுக, விசிக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். முதலமைச்சர் விஜய் மக்கள் விருப்பத்திற்கு எதிராக தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி என விளாசியுள்ளார்.

    திமுக அரசு

    புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," நல்லது செய்தால் வரவேற்போம், தவறு நடந்தால் எதிர்ப்போம் இது தான் எங்கள் நிலைப்பாடு. ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்தது சேகர் பாபுவிடம் தான் கேட்க வேண்டும். திமுக அரசு சரியாக செயல்படாததால் தான் திமுக தோல்வி அடைந்தது. விஜய்க்கு மக்கள் வாக்களித்தார்கள். உண்மையான தகவலை ஸ்டாலினுக்கு யாருக்கும் சொல்லவில்லை.. அவர் கூட உள்ள அமைச்சர்களே அதை அவரிடம் தெரிவிக்கவில்லை.

    Advertisement

    அதிமுக உட்கட்சி பிரச்சனை

    டிஜிபி தலைமையில் பேதை தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாட்களில் ஒரு மாவட்டத்திற்கு அவகாசம் கொடுங்கள். அதற்குள் சரி செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயிடம் கூறியுள்ளோம். அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதிமுக உட்கட்சி பிரச்சினை அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள். 50-60 ஆண்டுகளாக இருக்கும் கட்சி உட்கட்சி பிரச்சினையை சரி செய்வார்கள்.

    இடைத்தேர்தல்

    அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்யத விவகாரத்தில், ராஜினாமா ஜனநாயக படுகொலை. தமிழ்நாட்டில் தேவை இல்லாத இடைதேர்தல். இது சரியல்ல. இடைதேர்தல் வந்தால் தற்போது ராஜினாமா செய்த நான்கு வேட்பாளர்களும் படும் தோல்வி அடைவார்கள். தேவைப்பட்டால் எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஆளும் கட்சி வேட்பாளருக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை அறிவிப்போம். இந்த சூழ்நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம்." என்றார்.

    English Summary

    PMK leader Anbumani condemns Vijay over MLA resignations, calls it a democratic betrayal in Tamil Nadu politics.