புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!

  • புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    புதுச்சேரி விமான நிலையம் தற்போது சிறிய ரக (ATR) விமானங்களை மட்டுமே இயக்கும் வசதி கொண்டது. பெரிய ரக விமானங்கள் (Airbus A320/A321 போன்ற ஏர்பஸ் விமானங்கள்) வந்து செல்லும் வகையில் இதனை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய விமானங்கள் வந்து போக வேண்டும் எனில், ஓடுபாதையை பெரிதுபடுத்த வேண்டும். தற்போதைய ஓடுதளத்தை 2,300 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்டதாக விரிவாக்கம் செய்ய இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் (AAI) திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    இந்த விரிவாக்கத்திற்கு மொத்தம் 402 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், புதுச்சேரி எல்லையை ஒட்டி அமைந்துள்ள தமிழ்நாட்டின் பகுதியிலிருந்து 217 ஏக்கர் நிலமும், புதுச்சேரி பகுதியிலிருந்து 185 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும். இதற்கான பூர்வாங்கப் பணிகளை வருவாய்த்துறை தற்போது தொடங்கியுள்ளது.

    மத்திய பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால சாதனை விளக்கக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எல். முருகன், கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரிக்கு 15,000 கோடி ரூபாய் சிறப்பு மத்திய நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது எனக் கூறி, பின்வரும் பிற முக்கிய திட்டங்களையும் பட்டியலிட்டார்.

    Advertisement

    இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கங்களை இணைக்கும் மேம்பாலத் திட்டம்.
    ஜிப்மர் மருத்துவமனையில் அமையவுள்ள பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம்.
    சேதாரப்பட்டு - காரசூர் கிராமங்களில் அமையவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம், இதன் மூலம் 10,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    புதுச்சேரிக்கு கூடுதலாக 2-வது 'இந்தியா ரிசர்வ் பட்டாலியன்' காவல் படைப்பிரிவு அனுமதி, இதன் மூலம் 1,000 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
    92 கோடி ரூபாய் மதிப்பில் புதுச்சேரி இரயில் நிலைய நவீனமயமாக்கல் பணிகள்.

    என கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரிக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக எல்.முருகன் கூறியிருக்கிறார்.

    English Summary

    Puducherry airport: Union Minister of State L. Murugan has announced that the Central Government has allocated ₹600 crore for the expansion of the Puducherry airport.