“1009வது கடவுளா?”: முதலமைச்சர் விஜய் படத்தை காட்டிய TVK எம்எல்ஏவை கண்டித்த புதுச்சேரி சபாநாயகர்!

  • புதுச்சேரி: புதுச்சேரி தவெக எம்.எல்.ஏ ராமு, பதவியேற்கும்போது, தங்கள் கட்சியின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து கடவுள் எனப் பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர், விஜய் குறித்து அவர் பேசியவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு கூறினார். மேலும், "ஏற்கனவே 1008 கடவுள்கள் இருக்கிறார்கள், இவர் என்ன 1009 ஆவதா?" என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. மீண்டும் புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியின் ஆட்சி அமைகிறது. ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து இம்முறையும் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் இந்தக் கூட்டணி மொத்தம் 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    Advertisement

    இந்நிலையில் இன்று எம்எல்ஏக்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. எம்.எல்.ஏக்களுக்கு அதிமுகவைச் சேர்ந்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் தவெக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ராமு பதவியேற்கும் போது, கடவுள் எனக் கூறி தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் புகைப்படத்தை காட்டியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இரண்டரை வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டது. தமிழ்நாட்டை போல புதுச்சேரியிலும் தவெக தனித்தே போட்டியிட்டது. 30 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் மணவெளி தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் எம்எல்ஏ ராமு.

    Advertisement

    இவர் இன்று புதுச்சேரி பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்கும்போது பதவியேற்புக்கான உறுதி மொழியை வாசித்தபோது கடவுள் அறிய எனக்கூறி விஜய் புகைப்படத்தை காட்டினார். கடவுள் என குறிப்பிட்டு விஜய்யின் புகைப்படத்தை காட்டினார். அந்த புகைப்படத்தை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பார்வையிட்டார்.

    பிறகு எம்எல்ஏ ராமு பதவி ஏற்று முடிந்தவுடன் சபாநாயகர் அன்பழகன், புதிதாக எம்எல்ஏ ஒரு கார்டு காட்டினாரே. அதனை ஒளிபரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார் அன்பழகன். மேலும் சட்டசபை செயலாளரிடம் இந்த வார்த்தைகளை எல்லாம் நீக்குமாறும் தெரிவித்தார் சபாநாயகர் அன்பழகன்.

    Advertisement

    மேலும், "ஏற்கனவே 1008 கடவுள்கள் இருக்கிறார்கள், இவர் என்ன 1009 ஆவதா?" என கேள்வி எழுப்பி இதுபோல் யாரும் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார் அதிமுகவைச் சேர்ந்த சபாநாயகர் அன்பழகன். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    English Summary

    During his swearing-in ceremony, Puducherry TVK MLA Ramu held up a photo of his party leader, Vijay, and referred to him as a god. Objecting to this, the Speaker directed that the remarks made regarding Vijay be expunged from the House records. Furthermore, he sarcastically questioned, "There are already 1,008 gods; is he going to be the 1,009th?"