புதுச்சேரியில் கார் மீது லேசாக மோதியதாகக் கூறி மகள் கண்ணெதிரிலேயே முதியவரை இளைஞர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே முதியவரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனிடையே சம்பவம் நடந்த போதே பொதுமக்கள் குறிப்பிட்டஇளைஞரை சரமாரிய தாக்கி வீடியோவும் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி அண்ணா சாலை ஜெயின் கோவில் அருகே நேற்று இரவு முதியவர் ஒருவர் தனது மகளுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது முன்னாள் சென்ற கார் மீது அவர் லேசாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த இளைஞர், காரில் இருந்து இறங்கி முதியவரை எட்டி உதைத்ததுடன், கன்னத்திலும் சரமாரியாக அறைந்து அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறிய வாகன உரசலுக்காக வயதான முதியவர் மீது தாக்குதல் நடத்தியது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு சம்பந்தப்பட்ட இளைஞரை அடையாளம் கண்டு, உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இரண்டு ரெஸ்டோ பார்கள் மற்றும் ஏராளமான மதுபானக்கடைகள் உள்ளதால் அந்த இளைஞர் மது போதையில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் புகார் எழுந்தது.இந்த சூழலில் சம்பவத்தின் போதே, பொதுமக்கள் குறிப்பிட்ட இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்த விடியோவும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தனது தந்தை தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகள், 'அப்பாவை அடிக்காதீர்கள்' எனக் கதறி கெஞ்சியும் அந்த இளைஞர் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தை மீது தாக்குதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், வயது முதிர்ந்த முதியவர் என தெரிந்தும் அவரை தனது மகள் முன் தாக்கும் இந்த மனிதாபிமானமற்ற செயல் பார்ப்பவர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.