லீவு நாட்களில் கூட ஆஜராக மாட்டீங்களா? அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

  • புதுச்சேரி: சகோதரரை தாக்கிய வழக்கில், தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீது புதுச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை நேரில் வந்து பெற்றுக்கொள்ள புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது.

    Advertisement

    புதுச்சேரியில் எழில் நகரில் வசிக்கும் அமைச்சர் மரிய வில்சனின் சகோதரர், மரிய குலோத் மற்றும் அரவது மனைவி கெரோலின் மீது சொத்து விவகாரம் காரணமாக மரிய வில்சன் மற்றும் அவரது தந்தை தாக்குதலில் ஈடுபட்டதாக லாஸ்பேட்டை போலீஸார் கடந்த 2022ல் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    Advertisement

    அத்துமீறி நுழைதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களை பயன்படுத்துதல், கொலை மிரட்டல் என 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்டபோதும் மரிய வில்சன் ஆஜராகவில்லை. இப்படி இருக்கையில் குற்றப்பத்திரிகையை நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், இன்று நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் சிவக்குமார் நேரில் ஆஜராகி, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இருப்பதால்தான் அமைச்சர் நேரில் ஆஜராகவில்லை என்று விளக்கமளித்திருந்தார்.

    Advertisement

    இந்த விளக்கத்தை கேட்டு டென்ஷன் ஆன நீதிபதி சேரலாதன், இன்று விடுமுறை என்பதால்தான் ஆஜராக சொன்னேன். இப்போதும் ஆஜராகாவிட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    தவெக ஆட்சியாளர்களுக்கு சிக்கல்

    தவெக நிர்வாகிகள் பலரும் தொடர் சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள். அமைச்சர் சரத்குமார் மீதான போதை பவுடர் குற்றச்சாட்டு, கல்வித்துறை அமைச்சர் மீது திமுக எழுப்பிய குற்றச்சாட்டு, அமைச்சர் கீர்த்தணாவின் செய்தியாளர்கள் சந்திப்பு சர்சசை என.. அமைச்சர்கள் மீதான சலசலப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில், அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது தவெகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Marie Wilson: The Puducherry Police had registered a case against Tamil Nadu Minister Maria Wilson for allegedly assaulting his brother. Although the Puducherry court had ordered the Minister to appear in person to receive the charge sheet, he failed to do so. Consequently, the court has sharply questioned him regarding this matter.