வீடு புகுந்து தாக்கிய வழக்கு.. தமிழக அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

  • புதுச்சேரி: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் நாளை புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் தவெக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    கடந்த 2022 ஆம் ஆண்டு மரிய வில்சன் தனது சகோதரர் மரிய க்ளோட் மற்றும் அவரது மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் பதிவான வழக்கின் அடிப்படையில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    Advertisement

    மரிய வில்சன் மீது, அவரது உடன் பிறந்த சகோதரர் மரிய கிளோட் மற்றும் அவர் மனைவி மீது கடந்த 2022 ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில் உள்ள அவர்களை வீடு புகுந்து கட்டையால் தாக்கி கொலை முயற்சி நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக நீதிமன்ற வாய்தாவுக்கு அமைச்சர் மரிய வில்சன் சரியாக ஆஜராகாத நிலையில் இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிக்கையை நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள, வரும் ஜூலை 4 ஆம் தேதி புதுச்சேரி ஜெ.எம் ஒன் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரிய வில்சன் தற்போது தமிழக நிதி அமைச்சராக உள்ளார். இந்நிலையில், அடிதடி, கொலை முயற்சி வழக்கில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Tamil Nadu Minister Marie Wilson has been ordered to appear in person before the Puducherry court tomorrow. The court issued this order in connection with a criminal intimidation case registered in 2022.