புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்

  • புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக 6 இடங்களில் தோல்வி அடைந்துள்ள நிலையில் தோல்விக்கான காரணங்களை ஆராய கட்சியின் தலைமை குழு அமைத்திருப்பதாகவும் தெரிவித்த நமச்சிவாயம், அமைச்சர்கள் நியமனம் செய்வதில் என்.ஆர் காங்கிரஸ் உடன் கருத்து வேறுபாடு இல்லை என்றும், முதலமைச்சர் ரங்கசாமியுடன் கட்சி மேலிடம் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அமைச்சரவையை முழுமையாக அமைக்கப்படும் என்றும் நமச்சிவாயம் தெரிவித்தார்.

    Advertisement

    இது குறித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் அமைந்துள்ளது இதற்காக மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    Advertisement

    கடந்த ஆண்டுகளில் 2021-ல் இருந்து 2026 வரை தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் மத்திய அரசினுடைய ஒத்துழைப்போடு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நம்பிக்கை பெற்ற அரசாங்கமாக திகழ்ந்து வருகிறது.

    புதுச்சேரி மாநில காவல் துறைக்கு ஜனாதிபதியின் உயர்ந்த அங்கீகாரமான பிரசிடெண்ட் கலர்ஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனிமேல் புதுச்சேரி காவல்துறையினர் ஜனாதிபதியின் அங்கீகார பேட்ச் அணிந்து பணிபுரியே இருக்கிறார்கள் இது புதுச்சேரி மாநிலத்திற்கே பெருமையாக உள்ளது . மேலும் புதுச்சேரி மாநில அரசின் கோரிக்கையை ஏற்று செகண்ட் ரிசர்வ் பட்டாலியன் உருவாக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . இதன் மூலம் சுமார் 1007 பேர் புதிய காவலர்களை நியமிக்க முடியும்.

    Advertisement

    இதனால் புதுச்சேரி மாநில காவல் துறை மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. புதுச்சேரி அமைதியான மாநிலமாக உருவாக்குவதற்கு இது பெறும் உதவியாக இருக்கும், அதே சமயம் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பும் உருவாக்க முடியும் .

    தேர்தலுக்கு முன்பாகவும் தேர்தல் நேரத்திலும் புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்து வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டனர். இதற்காக பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினேன்.

    கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் குறைவான வாக்கு பதிவிலே வெற்றியை தவற விட்டு இருக்கிறோம். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வாங்கி கணிசமாக உயர்ந்திருக்கிறது . 30 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் 17 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நிலையில், 10 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 12 சதவீத வாக்குகளை பெற்று உள்ளது.

    Advertisement

    தேர்தலில் பாஜக 6 இடங்களில் தோல்வி அடைந்துள்ள நிலையில், தோல்விக்கான காரணங்களை ஆராய கட்சியின் தலைமை குழு அமைத்திருக்கிறது. அமைச்சர்கள் நியமனம் செய்வதில் என்.ஆர் காங்கிரஸ் உடன் கருத்து வேறுபாடு இல்லை. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் கட்சி மேலிடம் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அமைச்சரவையை முழுமையாக அமைக்கும்" இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்தார்.

    English Summary

    Ministerial Appointments in Puducherry: A Rift with Chief Minister Rangasamy? Namassivayam Clarifies.