புதுச்சேரி ரேஷன் கார்டு பெண்களுக்கு ரூ. 2500.. பஞ்சாயத்துக்கு நடுவே முதல்வர் ரங்கசாமி இனிப்பு செய்தி

  • புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற உடனே, சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள 65,000 குடும்பத் தலைவிகளின் கணக்கில் உயர்த்தப்பட்ட உதவித்தொகை 2500 ரூபாய் நேற்று முதல் வரவு வைக்கப்பட்டு வருகிறது.. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், மஞ்சள் கார்டுகளுக்கு அறிவித்த 1000 ரூபாயையும் விரைந்து வழங்க வலியுறுத்தியுள்ளனர்.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

    Advertisement

    புதுச்சேரி ரங்கசாமி

    தொடக்கத்தில் 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்டு வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகள் இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

    முதல்கட்டமாக 50,000 குடும்பத்தலைவிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் தலா 1000 ரூபாய் அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.. காலப்போக்கில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 75,000 குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது..

    சிவப்பு ரேஷன் கார்டுகள்

    இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை 2500 ரூபாயாக உயா்த்தப்படும் என்று முதலமைச்சா் ரங்கசாமி முன்னதாக அறிவித்திருந்தாா்.. அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவி தொகையை 2500 ஆக உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    வங்கி கணக்கு நேரடியாக பணம் அனுப்பும் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்து அவர்களின் மேல்நோக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதாக நிதி அயோக் பல்வேறு ஆய்வுகளில் சுட்டுக் காட்டியுள்ளது.. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் குடும்ப பொறுப்பில் உள்ள பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன..

    2500 ரூபாய் மகளிருக்கு

    இதனிடையே புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைத்துள்ளது.. இதனைத் தொடர்ந்து முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 13-ந்தேதி முறைப்படி பதவியேற்றார்.. அவர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, ஏற்கனவே கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான உதவித் தொகை 2500 ரூபாயை எந்தவித தொய்வுமின்றி உடனடியாக வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்தார்.

    Advertisement

    முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்துள்ள 65,000 குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் நேற்று முதல் இந்த உயர்த்தப்பட்ட தொகையான 2500 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    நேரடி வரவு - அரசாணை

    அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து தங்களது வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் வந்து சேர்ந்ததை உறுதி செய்த புதுச்சேரி இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத் தலைவிகள் தங்களின் எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியாவதுடன், பெண்களின் பொருளாதாரச் சுயசார்பும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதேசமயம், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே உறுதி அளித்திருந்தார்.

    இப் போது சிவப்பு கார்டுகளுக்குப் பணம் வழங்கப்பட்டு வருவதால், விடுபட்ட மஞ்சள் ரேஷன்கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கும் அறிவிக்கப்பட்ட அந்த 1000 ரூபாய் உதவித் தொகையையும் அரசு விரைந்து வழங்க வேண்டும் என அந்த மாநி பெண்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசின் இந்த மக்கள் நல அதிரடி நடவடிக்கையானது, அம்மாநிலப் பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்குப் புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளது..!!

    English Summary

    Puducherry women happy as Rs 2500 monthly assistance credited into bank accounts after CM Rangasamy takes oath