புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்று 85 நாட்கள் ஆன நேற்றைய தினம் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எந்தெந்த அமைச்சர்களுக்கு எந்தெந்த இலாகாக்கள் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. ஏப்ரல் 9 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் என்ஆர் காங்கிரஸ் - பாஜகவின் கூட்டணி வென்று ஆட்சியை தக்க வைத்தது.
என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார். இவர் மே 13ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான இந்த அமைச்சரவையில் மொத்தம் 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். புதிய அரசு அமைந்தாலும் கூட கடந்த 85 நாட்களாக யாருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இலாகா இன்றி அமைச்சர்கள் இருந்தனர். கூட்டணி ஆட்சி என்பதால் என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையே இலாகா பிரிப்பதில் பிரச்சனை தொடர்ந்து வந்தது. இதனால் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் நேற்று முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டன. 85 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலாகாக்களின் விவரம் வருமாறு: அதன்படி முதல்வர் ரங்கசாமி வசம் அமைச்சரவை விவகாரம், திட்டமிடல் மற்றும் நிதித்துறை, ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக மாற்றம், கூட்டுறவு, வருவாய் மற்றும் கலால், பொத நிர்வாகம், சுகாதாரம் மற்றும்குடும்பநலன், இந்து அறநிலையத்துறை, வக்ஃப் போர்டு, உள்ளாட்சி நிர்வாகம், நகர அடிப்படை சேவைகள், போக்குவரத்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், நகரம் மற்றும் கவுண்ட்டி திட்டமிடல், தகவல் மற்ம் பொது தொடர்புதுறை, தீ அணைப்பு சேவைகள் மற்றும் பிறருக்கு ஒதுக்கப்படாமல் உள்ள துறைகள் முதல்வர் ரங்கசாமி வசம் உள்ளது. அமைச்சர் நமச்சிவாயம் வசம் மீண்டும் உள்துறை வழங்கப்பட்டுள்ளது. உள்துறையுடன் அவருக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைநலத்துறை, வனம் மற்றும் வனஉயிரி துறை, மின்சாரம், கல்லூரிகளை உள்ளடக்கிய கல்வித்துறை, சட்டத்துறை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வசம் பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளத. இதனுடன் சுற்றலா மற்றும் சிவில்அவியேஷன், மீனவர் மற்றும் மீன் நலத்துறை, துறைமுகம், தொழில் மறஅறம் வணிகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பி ராஜவேல் வசம் ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. இந்து துறையுடன் கலை மற்றும் கலாசாரம், வீட்டு வசதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விபி சிவகொழுத்து வசம் உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்ட நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரம் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜிஎன்எஸ் ராஜசேகரனுக்கு விவசாயத்துறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் டிஆர்டிஓ, கம்யூனிட்டி டெவலப்மெண்ட், கிராம மே்பாடு மற்றும் சாய்னிக் வெப்ஃபேர் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் அனைத்தும் முதல்வர் ரங்கசாமி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.