Thirumavalavan: திருமாவளவனை சட்டசபைக்கு செல்லவிடாமல் தடுத்ததே திமுகதான்! துரை வைகோ பகீர்

  • புதுக்கோட்டை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை சட்டமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்தது திமுகதான் என திருச்சி எம்பி மதிமுக முதன்மைச் செயாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.

    Advertisement

    புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் துரை வைகோ கூறியிருப்பதாவது: மதிமுகவின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எங்கு பார்த்தாலும் வரவேற்கிறார்கள். ஆனால் எனக்கு மிகப் பெரிய வருத்தம் என்னவென்றால், திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவரது கட்சி விரும்பியது.

    Advertisement

    சட்டசபைக்கு சென்றால்தான் நாளை அந்த கட்சி சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் அந்த கட்சியும் நிர்வாகிகளும் முடிவு எடுத்து திருமாவளவன் போட்டியிட முடிவு செய்தார்கள். அதற்காக காட்டுமன்னார்கோவில் தொகுதியை தேர்வு செய்தனர்.

    ஆனால் திருமாவளவன் போட்டியிடக் கூடாது என அவருக்கு திமுக நிர்பந்தத்தை ஏற்படுத்தி வாய்ப்பை மறுத்தார்கள். மறுத்தது யாரென்ற கூட்டணியின் தலைமையான ஸ்டாலின். இது என்ன நியாயம் ?

    சமூகநீதி, சமத்துவம் பேசும் தமிழகத்தில் இதையெல்லாம் திருமாவளவன் பெரிதுப்படுத்தவில்லை. தருமபுரியில் நடந்த திருமண விழாவில் திமுக குறித்து அவர் குறை சொன்னதில் 100 சதவீதம் உண்மைதான்.

    Advertisement

    மதிமுகவை பொருத்தமட்டில் எங்களையும் கட்டாயப்படுத்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்து எங்கள் சின்னத்தில் போட்டியிட ஒரே ஒரு தொகுதியான சீர்காழியை ஒதுக்கிவிட்டு கடைசியில் அதையும் பறித்துவிட்டார்கள்.

    எனவே விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் திமுக தலையீடு இருந்தது. காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் அக்கட்சியின் சில வேட்பாளர்களை பொருத்தமட்டில் திமுக தீர்மானித்ததுதான். இவருக்கு கொடுங்க, அவருக்கு கொடுங்கன்னு காங்கிரஸை கட்டாயப்படுத்தினாங்க. இது போன்ற ஒரு விவகாரங்களால்தான் காங்கிரஸ் தலைமைக்கு திமுக மீது ஒரு வெறுப்பு வந்தது என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

    திமுக கூட்டணியில் இருந்த மதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பெரும்பான்மை இல்லாத தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    Advertisement

    அதில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இதனால் மேற்கண்ட கட்சிகளை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதிலும் விசிக மீதும் திருமாவளவன் மீது வன்மத்தை கக்குவதாக திருமாவளவன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    அந்த வகையில் தருமபுரியில் விசிக நிர்வாகி வீட்டு திருமண விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசும் போது திமுக குறித்து ஆவேசத்தை காட்டினார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறதற்கு திமுகதான் முழு பொறுப்பு. கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம், திமுகவின் அணுகுமுற குறித்து விவாதிக்க வேண்டும்.

    Advertisement

    தவெகவை குறைத்து மதிப்பிட்டது திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் திமுக கூட்டணி தோல்விக்கு காரணம். கூட்டணி கட்சிகளை ஏன் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக அனுமதிக்கவில்லை?

    திமுக கூட்டணி உடைந்து விடக் கூடாது என போராடினோம். ஆனால் கூட்டணியை காப்பாற்றிக் கொள்ள திமுக முயற்சி எடுக்கவில்லை. விசிகவில் இருந்த போது ஆதவ் என்னை முதல்வர் வேட்பாளர் என்றார். பதவி ஆசை இருந்திருந்தால் ஆதவ் முன்வைத்த திட்டத்தை நான் ஏற்றுக் கொண்டிருக்கலாமே

    திடீரென தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்ததால் பிற கட்சிகளுக்கு வருத்தம் ஏற்பட்டது. கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நான் கேட்டேன், ஆனால் விஜய் மீது திமுக ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?

    Advertisement

    விஜய் மீது அன்று நம்பிக்கை இல்லை. ஆனால் இன்று எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. தவெகவுக்கு எதிரான அரசியலை திமுக ஏன் செய்யவில்லை.

    அதிமுக, பாஜகவின் ஆதரவை விஜய் கேட்கவில்லை, விசிக, காங்கிரஸின் ஆதரவைதான் கேட்டார். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை விஜய் கேட்ட போது, திமுகவை தனிமைப்படுத்தும் நோக்கம் என நான் முதலில் சந்தேகப்பட்டேன். அதிமுக ஆதரவுடன்தான் நீங்கள் ஆட்சி அமைக்க போகிறீர்கள் என விஜய்யிடம் நான் கூறினேன்.

    சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரில் மதச்சார்பற்ற என்ற சொல் இடம் பெற வேண்டும் என நான் கோரினேன். எனது கோரிக்கையை முதல்வர் விஜய் உடனே ஏற்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English Summary

    MDMK Durai Vaiko says that DMK ban Thirumavalavan to contest in Assmembly election. They also selected some of the candidates in Congress without giving free hand to them.