புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய ஆட்சியர்கள் நீண்ட காலம் பணியாற்றியதில்லை. அது போல் அங்கு காலடி வைத்த விஜய் எத்தனை நாட்கள் முதல்வராக இருப்பார் என பார்க்கலாம் என திமுக முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா ஜோதிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதல பதிவில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை வருகிறார்.
அவரது வருகைக்காக புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அரசு பணத்தில் சுமார் இரண்டு கோடி வரை செலவு செய்து மேடை உள்ளிட்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந் நிலையில் விழா நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றச் சொல்லி நேற்றிரவு திடீர் என ஒரு உத்தரவு முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு விழா மாற்றப்பட்டு உள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது ஜோசியக்காரரைக் கை காட்டுகின்றார்கள்!! அங்கிருந்துதான் நலத் திட்ட உத்தரவுகளை நீங்கள் கட்டளையிட வேண்டும்" என்று முதல்வரிடம் அந்த ஜோசியக்காரர் சொன்னதாக பேசிக் கொள்கின்றார்கள். விஜய்க்கு அந்த ஜோசியக்காரர் சொன்னது இருக்கட்டும்.. இப்போது நான் ஒரு ஜோசியம் சொல்கிறேன்! இந்த அரண்மனை வருவதற்கு முன்பு பழைய அரண்மனையில் இருந்து நூற்றாண்டுகளாக தொண்டைமான் வம்சத்தினர் புதுக்கோட்டை சமஸ்தானத்தை தொடர்ச்சியாக அரசாட்சி செய்து வந்தனர். புதுக்கோட்டையின் கடைசி மன்னரான மஹாராஜா ஶ்ரீ பிரகதாம்பாள் தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் பகதூர் அவர்களின் காலத்தில் இந்த புது அரண்மனை கட்டப்பட்டு அவர் அங்கு தனது தம்பிமார்களுடன் குடியேறினார். குடியேறி ஆட்சி புரிந்த சில ஆண்டுகளிலேயே அருகில் இருந்த இந்தியா சுதந்திரம் அடைந்ததும் தனது நாட்டை தானே மனமுவந்து இந்திய நாட்டோடு இணைத்து விட்டார். தனது நாட்டை இந்தியாவோடு இணைத்த முதல் சமஸ்தான அரசர் என்ற பெருமையும் எங்கள் மகாராஜா பெற்றார்! இப்படியாக புது அரண்மனையில் அரசராக அவரது வாழ்வு சில ஆண்டுகளே நீடித்து அவர்களது பரம்பரையின் பல நூற்றாண்டு அரசாட்சியும் முடிவுக்கு வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பும் மன்னர் பெருமகனாருக்கு சொந்தமாகவே அந்த அரண்மனையும் இருந்து வந்தது. அதன் பிறகு மன்னர்களின் சொத்துக்களுக்கு மிகக் கடுமையான வரிகளையும் விதிக்க புதுக்கோட்டை அரசர் தன்னிடம் இருந்த பெரும் சொத்துக்களை தவிர்த்து விடலாம் என்ற முடிவுக்கும் வந்தார். இந் நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு திருச்சி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டு இருந்த புதுக்கோட்டை சமஸ்தானம் தனி ஒரு மாவட்டமாக கருணாநிதியால் 1974 ஜனவரி என்று உருவாக்கப்பட்டது. புதிய மாவட்டம் உருவாகும் செய்தியை அறிந்த மன்னர் பெருமகனார் தலைவர் கலைஞரை தொடர்பு கொண்டு "புதுக்கோட்டை தனி மாவட்டமாகி விட்டதால் வருகின்ற கலெக்டர் தான் அரசர் போன்றவர்! எனவே எனது அரண்மனையை கலெக்டர் அலுவலகமாக மாற்றி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் இடமாக்க வேண்டும்" என்ற வேண்டுகோளையும் முன் வைத்தார். அவர் எண்ணப்படி அந்த அரண்மனையை கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்ட தலைவர் கருணாநிதி அதற்குரிய தொகையையும் அவருக்கு செலுத்தினார். அதன் பிறகு வரும் கலெக்டர்கள் அங்குதான் அமர்கின்றனர். எத்தனையோ கலெக்டர்கள் வந்து அமர்ந்து போனாலும் யாரும் நிரந்தரமாக இல்லை. ஒரு வருடம், இரண்டு வருடம் தான் இருப்பார்கள். நான்கைந்து வருடங்கள் இருந்தவர்கள் கூட யாரும் இல்லை!! மாறுதலில் போய்விடுவார்கள். மாறுதலில் செல்பவர்களும் வேறு மாவட்டத்திற்கு கலெக்டராக மாறுவதில்லை.. பிரம்மாண்ட அரண்மனையில் இருந்த அவர்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று செயலாளராக ஏதேனும் ஒரு இருபது அடிக்கு இருபடி அடி அறையில் முடங்கிப் போவார்கள். "இப்படியாக அரசாட்சி என்பது நிலைத்த தன்மை உடையது அல்ல. காலம் எதையும் நிரந்தரமாக வைக்காது" என்பதற்கு காலத்தின் சாட்சியாக அந்த அரண்மனை இன்றும் இருக்கிறது.
"நீங்கள் இந்த நாட்டின் முதல்வர்..அதாவது ராஜா! புதுக்கோட்டைக்கு நீங்கள் சென்றால் ராஜாவாக கலெக்டர் அலுவலகம் தான் செல்ல வேண்டும்.ஜோசியக்காரர் சொன்னாரா?
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் என்பது புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் அரண்மனை. புது அரண்மனை என்று அழைக்கப்படும் அந்த இடம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இடம்!தொண்டைமான் வம்சம்
இரவோடு இரவாக மாறிய விஜய்யின் புதுக்கோட்டை பிளான்.. ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகள்
இந்தியா சுதந்திரம்
தொடர்ந்து மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மன்னர் மானியம் என்ற நிதியை 1971 இல் இந்திரா காந்தி ஒழித்தார்.புதுக்கோட்டை அரசர்
புதிய மாவட்டமான புதுக்கோட்டை
முதல்வர் விஜய் திறந்து வைத்த புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் என்ன வசதிகள்?
அரண்மனை
பிரம்மாண்ட அறை டூ 10- க்கு 10 அறை
அரசாட்சி
இப்படிப்பட்ட அரண்மனையில் இன்று காலடி வைக்கிறார் விஜய். அவர் எத்தனை நாட்களுக்கு முதல்வர் என்று பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.