புதுக்கோட்டை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. உயர்கல்விக்காக ரூ.30 கோடி கல்விக்கடன்.. தமிழக அரசு ஏற்பாடு

  • புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க ஒரு முக்கிய சான்ஸ் காத்திருக்கிறது. அது என்ன தெரியுமா? பண வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஒரு சூப்பர் ஏற்பாட்டை செய்துள்ளது.. மாணவர்களுக்கு இதில் கிடைக்கும் பலன் என்ன? எவ்வளவு கல்விக்கடன் கிடைக்கப் போகிறது? இதை பற்றியெல்லாம் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

    Advertisement

    உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், பணம் இல்லாததால் எத்தனையோ மாணவர்களின் கனவு தடைபடுகிறது. இதுபோன்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    Advertisement

    இந்த முகாம்களில் பல்வேறு வங்கிகள் பங்கேற்று, கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு வழங்குகின்றன. ஒரே இடத்தில் வங்கிகளை அணுகி, சந்தேகங்களை கேட்டு, கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

    மாணவர்களுக்கு கல்விக்கடன்

    முக்கியமாக, கல்லூரி கட்டணம், விடுதி செலவு, புத்தகங்கள், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கல்வி தொடர்பான செலவுகளுக்காக கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகை மாணவர் படிக்கும் படிப்பு, கல்லூரி மற்றும் கல்விக் கட்டணத்தைப் பொறுத்து மாறுபடும்.

    இப்படிப்பட்ட சூழலில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து ரூ.30 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் செப்டம்பர் 17-ம் தேதி அதாவது நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது.

    Advertisement

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் இந்த மாபெரும் கல்விக்கடன் முகாம், 17.09.2026 (வியாழக்கிழமை) அன்று மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி வளாக கலையரங்கத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்

    இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரூ.30 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் ஏற்கனவே பல்வேறு கல்விக்கடன் முகாம்களை நடத்தியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் அலுவலர்களும் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர். மேலும், மாணவ, மாணவிகள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதற்கும், கடன் பெறுவதற்கும் தேவையான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

    ஆவணங்கள், விண்ணப்பிக்கும் நடைமுறை

    மாணவர்கள் பல்வேறு வங்கிகளின் கல்விக்கடன் திட்டங்கள் குறித்து நேரடியாக தெரிந்துகொள்ளலாம். கல்விக்கடன் பெறுவதற்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். வங்கித் தரப்பிலிருந்து நேரடியாக ஆலோசனை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

    எனவே, அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம்களை நடத்த விரும்பும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான உதவிகளுக்காக புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

    English Summary

    Pudukkottai Students Get Big Opportunity.. ₹30 Crore Education Loans for Higher Studies.. District Administration Initiative