விஜய் சார்! ராமநாதபுரம் அரண்மனை அருகே கணவரின் பூர்வீக சொத்து அபகரிப்பு!நடிகை ஷர்மிலி கண்ணீர்

  • ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரண்மனை அருகே தனது கணவரின் பூர்வீக சொத்தை யாரோ தனி நபர்கள் அபகரித்து தங்களுகக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ஷர்மிலி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: எனது கணவரின் பூர்வீக சொத்தை சில தனிநபர்கள் போலி பட்டா மூலம் அபகரித்துவிட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர்களிடம் புகார் கொடுத்துள்ளேன்.

    Advertisement

    அந்த தனிநபர்களில் ஒருவருக்கு தவெகவில் அரசு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு அவரும் ஒரு காரணம். அவர் யார் என்பதை பிறகு சொல்கிறேன். எனவே முதல்வர் விஜய் சார் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நானும் எனது கணவரும் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களது உடம்பில் ஒரு கீறல் விழுந்தாலும் நான் எஸ்பி அலுவலகத்தில் யார் யார் பெயர்களை கொடுத்தேனோ அவர்கள்தான் காரணம்! நான் உங்களுடன் 4 படங்களில் நடித்துள்ளேன். என்னை உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    கவர்ச்சி நடிகை ஷர்மிலி, கவுண்டமணியுடன் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடிவேலு, விவேக், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோருடனும் நடித்துள்ளார்.

    இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததும் தனது 40ஆவது வயதில் ஐடி துறையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

    நடன கலைஞராக இருந்து நடிகையான ஷர்மிலிக்கு 48 ஆவது வயதில் குழந்தை பிறந்தது. தற்போது ஷர்மிலிக்கு அவருக்கு 51 வயதாகிறது. இவர் தமிழில் ஆவாரம் பூ என்ற படத்தில் அறிமுகமானார்.

    கவுண்டமணியுடன் தான் நடிப்பதை விட்டுவிட்டதால் அவர் மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க முடியாதபடி தனது பட வாய்ப்புகளை கெடுத்ததாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

    English Summary

    Actress Sharmili complaint that her husband's ancestral property was encroached by some individuals who gives life threat to the couple.