அம்பை தொகுதி இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு கொடுப்பீர்களா? பசும்பொன்னில் ஸ்டாலின் கொடுத்த பதில்

  • ராமநாதபுரம்: அம்பை இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்று கூறிய ஸ்டாலின், பின்னர் முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குகிறார். இதனால் சீமானுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சீமானுக்கு ஆதரவு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீமானை பொது வேட்பாளராக நிறுத்தினால், தவெகவை எளிதாக வீழ்த்த முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேசுகையில், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எங்களின் மரியாதையை செலுத்த வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமைப்படுகிறோம்.

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்பி வாக்களித்தவர்களே, இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற சிந்திக்க தொடங்கிவிட்டனர். விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, சிறைச்சாலைகளில் கைதி தப்புவது என்று ஏராளமான விஷயங்கள் நடக்கின்றன. சிறுமிகள் திடீர் திடீரென காணாமல் போகும் சூழல் நிலவி வருகிறது.

    Advertisement

    சினிமாவில் ஹீரோவாக இருந்தவரை நம்பி வாக்களித்தவர்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். தவெக ஆட்சி வந்த பின் எந்த பணிகளும் நடக்கவில்லை. கோட் சூட் போட்டு கொண்டு ஏதோ அலுவலகத்திற்கு பணிக்கு செல்வது போல் காலை 9 மணிக்கு வந்து, மாலை 5 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டுவிடுகிறார் என்றார். தொடர்ந்து அம்பை தொகுதியில் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும்.. பின்னர் முடிவை சொல்வோம் என்றார். அதேபோல் எங்கள் மீதான புகார்களில் உண்மையில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். திமுக எமர்ஜென்சி, தடா, பொடா, மிசா என்று எண்ணற்ற விஷயங்களை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK Leader MK Stalin Maintains Suspense on Backing Seeman Ambai Candidacy Ahead of By Election