ராமநாதபுரம்: மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை, அவர்களது உறவினர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாக் பகுதியில் உள்ள வீட்டில் சையது அலி பாத்திமா (40), அனீஸ் பாத்திமா (42) ஆகியோர் இருந்தனர். அப்போது கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த ரிஸ்வான் ஆஷிக் ரகுமான் (25) என்பவர் மதுபோதையில் வீட்டிற்குள் சென்று தவறாக நடக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.
இதனால் அந்த பெண்கள் இருவரும் ஆஷிக்கை கைகளால் தாக்கினராம். அப்படியும் அந்த நபர் வெளியே போகாததால் இரு பெண்களும் கத்தி கூச்சலிட்டனர். இவர்களது சப்தம் கேட்டு அந்த பெண்களின் உறவினர்கள் ஓடி வந்து ஆஷிக்கை தாக்கினர். பிறகு அவரை கட்டி வைத்துவிட்டு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது ஆஷிக்கின் உடம்பிலும் தலையிலும் காயங்கள் இருந்தனவாம். இதையடுத்து ஆஷிக்கை காவல்துறையினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆஷிக் இன்று காலை உயிரிழந்தார். இச் சம்பவம் தொடர்பாக கீழக்கரை 500 பிளாட் பகுதியைச் சேர்ந்த சினி ஹமீது (45), காஜா மொய் நூதின் (42),அமீர் அப்துல்லா ( 41), முகமது ஆதில் (27) ஆகிய நால்வரை பிடித்து கீழக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பறிபோன பிஞ்சு உயிர்! கண்ணீருடன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை