குடும்ப அட்டைதாரர்களே... ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்யவில்லையா.. முக்கிய அறிவிப்பு


  • ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை உறுப்பினர்களின் இ-கே.ஒய்.சி. கைரேகை பதிவினை ரேஷன் கடைகளில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

    Advertisement

    ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்கள் தமிழ்நாடு அரசால் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. 5 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் கைரேகை வைக்காதவர்கள், அருகில் உள்ள ரேஷன் கடை நேரில் செல்ல வேண்டியது அவசியம் ஆகும். கைரேகை வைக்காதவர்கள் பொருட்களை வாங்க இயலாது. அவர்கள் கைரேகை பதிவு செய்ய பின்னரே பொருட்கள் வழங்கப்படும்.

    Advertisement

    கைரேகை விழாத குழந்தைகள் மற்றும் முதியோர்கள், தங்கள் ஆதார் அட்டையில் கைரேகை அல்லது கண் கருவிழிப் பதிவை அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது ஆதார் மையத்தில் முதலில் புதுப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்களும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடும்ப அட்டை உறுப்பினர்களின் இ-கே.ஒய்.சி. கைரேகை பதிவினை ரேஷன் கடைகளில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இப்பணி 93.33 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 46,224 குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவினை மேற்கொள்ளவில்லை. எனவே கைரேகை பதிவினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் இ-கே.ஒய்.சி. புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

    Advertisement

    கைரேகை விழாத குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தங்கள் ஆதார் அட்டையில் விரல் ரேகை மற்றும் கண் பதிவை புதுப்பித்த பின்னரே இ-கே.ஒய்.சி. மேற்கொள்ள முடியும். இதற்காக அருகில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களை அணுகி ஆதார் புதுப்பிப்பை மேற்கொள்ளலாம்.

    வருகிற 25-ந்தேதிக்குள் குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவினை மேற்கொள்ள வேண்டும். இறந்த உறுப்பினர்களின் பெயர்களை தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி நீக்க வேண்டும், அல்லது தங்கள் பகுதியில் உள்ள ரேஷன்கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண், ஆதார் அட்டை நகலை வழங்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட தெரிவித்தார்.

    English Summary

    Ramanathapuram District Collector Sivaguru Prabhakaran has directed that the e-KYC fingerprint registration of ration card members must be mandatorily completed at ration shops.