'ராமநாதபுரத்தில் கல்யாணமான இளைஞருடன் நட்பு.. மனைவி, மாமியாரை சாய்த்த மெக்கானிக் வாக்குமூலம்

  • ராமநாதபுரம்: ஏற்கனவே கல்யாணம் ஆன இளைஞருடனான நட்பை கைவிடாமல் அவருடன் மனைவி ஊர் சுற்றியதாகவும், அதனை நேரில் பார்த்த ஆத்திரத்தில் மனைவியை கொன்றதாக இரட்டைக்கொலையில் கைதான கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    Advertisement

    ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 36 வயதாகும் செல்லமுத்து மெக்கானிக் ஆக இருக்கிறார். இவருடைய மனைவி சர்மிளா தாக்சூர்க்கு 30 வயது ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவரைவிட்டு பிரிந்து சர்மிளா வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தாராம்.

    Advertisement

    கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் அந்த வீட்டுக்கு சென்ற செல்லமுத்து, மனைவி சர்மிளாவையும், மாமியார் பத்மாவதியையும் தன் மகள் கண்முன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து செல்லமுத்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் சரண் அடைந்தார். இதை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மனைவி, மாமியாரை கொன்றது ஏன்? என்பது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக செல்லமுத்து அளித்த வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறிய தகவல்களை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவற்றை பார்ப்போம்.

    Advertisement

    என் பெயர் செல்லமுத்து, என் மனைவி சர்மிளா. எங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக சென்றது. ஆனால் ஒரு இளைஞரால் வாழ்க்கையில் பூகம்பம் ஏற்பட்டது. அந்த வாலிபர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர்..

    அவருக்கு என் மனைவி சர்மிளாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் போனில் பேச தொடங்கினர். முதலில் இதை நான் சாதாரண எடுத்துக்கொண்டேன். நாளடைவில் அவர்கள் மணிக்கணக்கில் பேசத்தொடங்கினர். அந்த இளைஞன் வெளியிடங்களில் என் மனைவி சந்தித்து பழகியதும் எனக்கு ஒரு கட்டத்தில் தெரியவந்தது.

    இருவருக்கும் குடும்பங்கள் உள்ளன, எனவே அந்த இளைஞருடனான தொடர்பை கைவிடும்படி என் மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர் என் பேச்சை கேட்காமல் அந்த இளைஞன் கூறியதை கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்குள் பிரச்சனை அதிகரித்தது.

    Advertisement

    இருவரும் ஒன்றாக ஊர் சுற்றித்திரிந்ததை ஒருநாள் நான் நேரில் பார்த்துவிட்டேன். இதுபற்றி கேட்டபோது தகராறு வெடித்தது. அவர்தான் முக்கியம் என சர்மிளா என்னை விட்டு மகளை அழைத்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றார். பின்னர் விவாகரத்தும் கோரினார். எனது வீட்டில் இருந்த பொருட்களையும் மாமியார் பத்மாவதி எடுத்துக்கொண்டார். இதனால் மனைவி, மாமியார் மீது அதிக ஆத்திரம் ஏற்பட்டு, 2 பேரையும் வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு செல்லமுத்து வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன..

    English Summary

    Ramanathapuram crime: Mechanic confesses after wife develops friendship with a married young man."