பிரதமர் மோடி பசும்பொன்னிற்கு வந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார்.. துணை ஜனாதிபதி தகவல்

  • ராமநாதபுரம்: பிரதமர் மோடி பசும்பொன்னிற்கு ஒரு நாள் வந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    Advertisement

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று காலை தேவர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரிசையில் நின்ற பொதுமக்களிடம் குடியரசு துணைத் தலைவர் கை கொடுத்து வணக்கம் தெரிவித்தார்.

    Advertisement

    இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் குப்புராமு, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    பின்னர் குடியரசு துணைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சுதந்திர போராட்ட காலத்தில் மட்டுமில்லாமல் அதற்குப் பிறகும் சமுதாயத்திற்காக தன் வாழ்வின் குறிக்கோளாக முழு மூச்சாக செயல்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை தலைவராக ஏற்றுக் கொண்டவர். தேசத்தின் எழுச்சிக்கும், தெய்வீக எழுச்சிக்கும் தமிழக மண்ணில் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு எந்த துரோகத்தையும் செய்ய விரும்பவில்லை. அவர் மட்டும் அரசியலில் சமரசம் செய்திருந்தால் தமிழகத்தின் முதல்வராக முத்துராமலிங்கத்தேவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பார்.

    Advertisement
    தேவர் ஜெயந்தி: பசும்பொன்னிற்கு எடப்பாடி வரக் கூடாது.. ஆட்சியரிடம் மனு கொடுத்தது யார் தெரியுமா?

    தன் வாழ்நாள் முழுவதும் நேர்மை, தவம், கண்ணியம் மிகுந்த வாழ்க்கை வாழ்ந்தவர். ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுத்தவர். அம்மக்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவாயில் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். தன்னுடைய சொத்தில் பெரும் பகுதியை ஆதிதிராவிட மக்களுக்காக கொடுத்துள்ளார். இப்படி மகத்தான தேசிய தலைவரின் பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் நடத்திருப்பது, மகா சித்த புருஷர் என்பதை நிரூபிக்கிறது.

    உண்மையான தேசியமும், தெய்வீகமும் என்றைக்கும் அழியாமல் பாதுகாப்பது நமது கடமையாகும். அவருக்கு நாம் தொடர்ந்து அஞ்சலி செலுத்த வேண்டும். பசும்பொன்னிற்கு ஒரு நாள் பிரதமர் மோடி வருகை தந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார் ' இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    English Summary

    Vice President C. P. Radhakrishnan, who paid his respects at the memorial of Thevar in Pasumpon, stated that Prime Minister Modi would visit Pasumpon one day to pay tribute to Thevar.