ராமநாதபுரம்: வருகிற 30-ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நடைபெற இருக்கும் நிலையில் அவருக்கு மரியாதை செலுத்த தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் பசும்பொன் செல்ல இருக்கின்றனர். இந்நிலையில் பசும்பொன்னில் சட்ட ஒழுங்கினை பாதுகாக்கும் பொருட்டு வருகின்ற அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் அரசு மதுபான கடை மற்றும் எப்எல் 2 உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளும் அடைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனார் என அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவானது அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் கூட்டம் என இரண்டு நாட்களும் பசும்பொன் கிராமமே களை கட்டி காணப்படும். திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி அந்த கட்சியின் பிரதான தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள். கடந்த காலங்களில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அனைவரும் பசும்பொன்னில் மரியாதை செலுத்தியுள்ளார். இதேபோல தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். திருவிழா போல, விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து அப்பகுதி மக்கள் தேவரை தரிசிப்பதும் வழக்கம். அந்த வகையில் வருகின்ற 30ஆம் தேதி தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தவுள்ளனர். விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும், அங்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் நாட்களில் சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். டிஐஜி தலைமையில் 20 மாவட்ட எஸ்பிக்கள்ம் ஏடிஎஸ்பிக்கள்ம் டிஎஸ்பிக்கள் தலைமையில் இந்த பாதுகாப்பு போடப்பட இருக்கிறது, ராமநாதபுரத்தை சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது, மேலும் பசும்பொன்னில் மட்டும் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி நடைபெற உள்ளது, விழாவுக்கு வரும் பொதுமக்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது, சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும்,இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது, அது மட்டுமல்லாமல் இராமநாதபுரத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது, இந்நிலையில் பசும்பொன்னில் சட்ட ஒழுங்கினை பாதுகாக்கும் பொருட்டு வருகின்ற அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் அரசு மதுபான கடை மற்றும் எப்எல் 2 உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளும் அடைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். மூன்று நாட்கள் கடை அடைப்பு தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தேவர் ஜெயந்தி
சிபி ராதாகிருஷ்ணன்
ஆலோசனைக் கூட்டம்
பாதுகாப்பு ஏற்பாடுகள்
ட்ரோன்கள் பறக்க தடை
டாஸ்மாக் விடுமுறை