துபாய் மாமியார்.. ராமநாதபுரம் ஷர்மிளாவின் கள்ளக்காதல்? பிஞ்சு குழந்தைகள் முன் என்ன நடந்தது?

  • ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரத்தில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம், ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உலுக்கி போட்டிருக்கிறது... காதல் திருமணம், சந்தேகம், போலீஸ் கேஸ், டைவர்ஸ் என அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் நடந்து, கடைசியில் 2 உயிர்களும் பறிபோய்விட்டன.. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.. என்ன நடந்தது ராமநாதபுரம் மாவட்டத்தில்?

    Advertisement

    ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து. வெளிநாட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.. இவர், காட்டுப்பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த சர்மிளா தாக்குர் என்பவரை காதலித்துள்ளார்..

    Advertisement

    பிறகு 11 வருடங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணமும் செய்து கொண்டனர்.. இந்த தம்பதிக்கு 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.

    ராமநாதபுரம் தம்பதி

    ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், சந்தேக புயல் வீச துவங்கியிருக்கிறது.. ஷர்மிளாவின் நடத்தையில் செல்லமுத்துவுக்கு லேசாக சந்தேகம் வந்துள்ளது.. இந்த சந்தேகம் வலுவடைந்து, அடிக்கடி தகராறுகள் ஏற்படும் அளவுக்கு சென்றுவிட்டது.

    ஒருகட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை இந்த புகார் சென்று, செல்லமுத்து ஜெயிலுக்கும் செல்ல நேரிட்டது. ஜாமீனில் வெளிவந்த பிறகு, தம்பதி இருவருக்கும் இடையே இருந்த விரிசல் மேலும் அதிகரித்தது. கடந்த 7 மாதங்களாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழத் தொடங்கினர். சர்மிளாவுடன் மகளும், செல்லமுத்துவுடன் மகனும் வசித்து வந்தனர். எனினும் தம்பதி இருவரும் சட்டப்பூர்வமாகப் பிரிவதற்காக கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

    Advertisement

    பிரச்சினைகள் இப்படி போய்க்கொண்டிருக்க, துபாயில் பணிபுரிந்து வந்த ஷர்மிளாவின் அம்மா பத்மாவதி, சமீபத்தில்தான் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார்..

    ஷர்மிளாவின் கள்ளக்காதல்

    அதுமட்டுமல்ல, ஷர்மிளாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் உள்ளதாக, செல்லமுத்துவின் காதுக்கு தகவல் எட்டியது.. இதைக் கேட்டதுமே கொந்தளித்து போன செல்லமுத்து, உண்மையிலேயே ஷர்மிளாவுக்கு கள்ளக்காதல் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள விரும்பினார்.. இதற்காக கடந்த சில நாட்களாகவே மனைவியின் நடமாட்டத்தையும் கண்காணித்து வந்திருக்கிறார்.

    சம்பவத்தன்று காலை, பேர குழந்தையைப் பார்ப்பதற்காக பத்மாவதி வைகை நகரில் உள்ள மகள் வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு அம்மாவையும், மகளையும் அழைத்துக் கொண்டு சர்மிளா வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த செல்லமுத்து திடீரென வழிமறித்து ஷர்மிளாவிடம் கள்ளக்காதல் பற்றி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் அதிகரித்து போகவும் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற செல்லமுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஷர்மிளாவை சரமாரியாக வெட்ட தொடங்கினார்.

    Advertisement

    ரத்த வெள்ளத்தில் 2 உயிர்கள்

    கண்முன்னே மகள் வெட்டப்படுவதைக் கண்டு அலறித் துடித்த பத்மாவதி, மகளை காப்பாற்றப் பாய்ந்து சென்றுள்ளார். ஆனால், வெறிபிடித்த நிலையில் இருந்த செல்லமுத்து, தடுக்க வந்த மாமியாரையும் கொடூரமாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டது. 2 கொலைகளையும் செய்த செல்லமுத்து நேரடியாகக் கேணிக்கரை ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. கைதான செல்லமுத்துவிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..

    Advertisement

    துபாய் மாமியார்

    செல்லமுத்து ஆரம்பத்தில் ராமநாதபுரத்தில்தான் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. ஆனால் சம்பளம் போதவில்லை என்பதால் துபாய்க்கு சென்றிருக்கிறார். ஆனால் ஏற்கனவே ஷர்மிளாவின் அம்மா பத்மாவதி, துபாயில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். வருடத்துக்கு ஒருமுறை 2 மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவது வழக்கமாம்.

    அப்படித்தான் கடந்த ஜனவரியில் லீவில் வந்து மகளுடன் தங்கியிருந்துள்ளார்.. அதற்கு பிறகு உடல்நல குறைவு காரணமாக பத்மாவதி துபாய்க்கு செல்லவில்லை.. குழந்தைகளுக்காக கணவருடன் சேர்ந்து வாழும்படி ஷர்மிளாவுக்கு பத்மாவதி அட்வைஸ் தந்துள்ளார். ஆனால் ஷர்மிளா அதை கேட்கவில்லை..

    Advertisement

    இதுதான் கொலைக்கு காரணமா

    அதேபோல செல்லமுத்துவுக்கும் அவரது உறவினர்கள் அறிவுறுத்தி வந்துள்ளனர்.. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் இப்படி அட்வைஸ் செய்வது செல்லமுத்துவுக்கு எரிச்சலை தந்து வந்துள்ளது.. மேலும், மனைவி யாரோ ஒரு நபருடன தவறாக பழகுவதை கேள்விப்பட்டு மேலும் கொந்தளித்துள்ளார்.

    அதுமட்டுல்ல, துபாயில் வேலை பார்த்து அனுப்பும் பணமெல்லாம் எங்கே போகிறது என்று ஷர்மிளாவிடம் கணக்கு கேட்டு வந்துள்ளார்.. மேற்கண்ட காரணங்கள்தான் செல்லமுத்துவை உச்சக்கட்ட கோபத்துக்கு உள்ளக்கி கொலை வரை கொண்டு சென்றதாக கூறுகிறார்கள்.

    ஆனால், 2 கொலைகளும் அந்த பிஞ்சு குழந்தைகள் முன்புதான் நடந்துள்ளது.. தாயும், தந்தையும் இல்லாமல் அழுது கொண்டிருக்கும் அந்த 2 குழந்தைகள், உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்களாம்...!!

    English Summary

    Ramanathapuram Woman Sharmila Murder Case: Dubai Mother-in-Law, Alleged Affair and Shocking Crime Before Children