அரசு பேருந்தை எடுத்துக்கொண்டு ஹாயாக கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநர்.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு

  • ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய அரசு பேருந்து ஓட்டுநர், நடுரோட்டில் சாவியுடன் பேருந்தை நிறுத்திவிட்டு கறி விருந்து சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக நடந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் அரசுப் பேருந்தை எடுத்துக் கொண்டு சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், இடையிலேயே காதணி விழாவுக்கு சென்று கறி விருந்து சாப்பிட்டுத் திரும்பி வந்துள்ளார். ராமேஸ்வரத்தில் கறி விருந்து சாப்பிடுவதற்காக அரசு பேருந்தை எடுத்து சென்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு செல்லும் அரசு பேருந்தை ஓட்டுநர் தனியாக எடுத்து சென்றுள்ளார். பேக்கரும்பில் நடந்த காதணி விழாவுக்கு சென்ற ஓட்டுநர், நடுரோட்டில் சாவியோடு பேருந்தை நிறுத்தி வைத்துள்ளார்.

    ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை எடுத்து மாற்று வழித்தடத்தில் இயக்கி பேக்கரும்பில் நடுரோட்டில் 45 நிமிடங்களுக்கு நிறுத்திவிட்டு விருந்தில் சாப்பிட்டுவிட்டு வந்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    An incident has caused a stir where a government bus driver, who was supposed to transport passengers from Rameswaram to Dhanushkodi, took the bus out alone to enjoy a meat feast before returning.