தவெக செயல்பாடு எப்படி.. ஸ்டாலின் கொடுத்த ஹேண்ட் சிக்னல்.. மீண்டும் சம்பவமா

  • ராமநாதபுரம்: சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து 6 மாதங்களாகியும் தமிழக அரசியலின் பரபரப்பு ஓயவில்லை. 50 ஆண்டு கால அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த திமுக மற்றும் அதிமுக இணைந்து தவெகவை மாறி மாறி விமர்சனம் செய்கிறார்கள். திமுக, அதிமுகவை தீவிரமாக எதிர்த்த நாம் தமிழர் கட்சியும் தவெகவை கடுமையாக விமர்சிக்கிறது. அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் சீமான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். சீமானை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுகுறித்தும், தவெக ஆட்சி செயல்பாடு குறித்தும் மு க ஸ்டாலின் கோபமாக பதில் அளித்துள்ளார்.

    Advertisement

    ராமநாதபுரம் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியளாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "நாங்கள் ஆட்சியில் என்ன செய்தோம், என்ன செய்வோம் என்பதையெல்லாம் பிரச்சாரத்தில் சொன்னோம். அவர்களும் நிறைய சொன்னார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அது எதுவுமே நடைபெறவில்லை. அதைப்பற்றி இந்த முதலமைச்சருக்கு கவலையில்லை.

    Advertisement

    தவெக செயல்பாடு

    அவர் என்னவோ கோட்சூட் போட்டுக் கொண்டு, ஏதோ ஆபிஸ் செல்வது போல காலை 9 மணிக்கு தலைமை செயலகம் வந்துவிட்டு மாலை 5 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு சென்றுவிடுகிறார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலுக்கான தேதியை முதலில் அறிவிக்கட்டும். அதன் பிறகு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆதரிப்பது பற்றி முடிவு செய்யப்படும். இந்த ஐந்து மாத தவெக ஆட்சிக்கு பெரிய ஜீரோவை மட்டும் மதிப்பெண்ணாக கொடுப்போம். இந்த ஆட்சி வரவேண்டுமென விரும்பி வாக்களித்தவர்கள் எல்லாம், எப்போது ஒழியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    விலைவாசி உயர்வு விஷம் போல உயர்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறைச்சாலை கைதிகள் எல்லாம் தப்பித்து ஓடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் துன்பத்துள்ளாக்கப்படுகிறார்கள். சிறுமிகள் கற்பழிக்கப்படுவதுடன் காணாமல் போகிறார்கள். விஜய் சினிமாவில் ஹீரோ இருக்கிறார், நிஜத்திலும் அப்படியிருப்பார் என நம்பி ஏமாற்றத்தில் உள்ளனர். முன்னாள் முதலமைச்சர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதில்லை. கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் மரியாதை கொடுப்பதில்லை.

    Advertisement

    கவலையில்லை

    ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எனக்கு கட்சி தோழர்கள், தொண்டர்கள் துணை நிற்கிறார்கள். அதுவே போதுமான. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம். வழக்கு போலியானது என்பதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். இதெல்லாம் பொருட்டே இல்லை. திமுகவினர் எமர்ஜென்ஸியை எதிர்த்தவர்கள். மிசா சட்டத்தை பார்த்தவர்கள்.
    தடா சட்டத்தை பார்த்தவர்கள். பொடா சட்டத்தை பார்த்தவர்கள். எங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை" என்றார்.

    English Summary

    Former Chief Minister and DMK chief MK Stalin once again gave hand signal. This time with the TVK government.