தங்கச்சியை விட்டுருடா.. நண்பனின் தகாத உறவால் வெலவெலத்து நின்ற அண்ணன்.. அதிர்ந்த ராமநாதபுரம்

  • ராமநாதபுரம்: ராமநாதபுரம் பீச்சில் இளைஞர் ஒருவர் அசையாமல் கிடந்துள்ளார்.. இதனால் பதறிப்போன பொதுமக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் அந்த உண்மை தெரியவந்துள்ளது.. ஒரே நாளில் ஒரு குடும்பம் சிதைந்து, மூன்று இளைஞர்கள் தங்கள் வாழ்வை சிறைக்குள் தொலைத்திருப்பது ராமநாதபுரம் பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி விட்டது. என்ன நடந்தது?

    Advertisement

    ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூர் வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் கடந்த 16ம் தேதி ஆண் ஒருவர் விழுந்து கிடந்தார்.. அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, அந்த நபர் இறந்து சடலமாக கிடப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்..

    Advertisement

    ராமநாதபுரம் பீச்

    உடனடியாக வாலிநோக்கம் மரைன் போலீசாருக்கு தகவல் அளிக்கவும் அவர்கள் விரைந்து சென்று தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் உயிரிழந்தவர் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் மற்றும் மீனவருமான 35 வயதான சிலம்பரசன் என்பது உறுதியானது. உடனடியாக சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. உடல் முழுவதும் இருந்த காயங்கள், இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியது.

    பிறகு போலீசார் இது குறித்த விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.. அப்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீசாரின் விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்தன.

    Advertisement

    கணவரை இழந்த பெண்

    அதாவது, கன்னிராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் சகோதரர் செல்வலிங்கம் என்பவருக்கும், சிலம்பரசனுக்கும் இடையே நீண்டகாலமாகவே மோதல் இருந்து வந்துள்ளது. அந்தப் பெண் கணவரை இழந்த நிலையில், சிலம்பரசனுக்கும் அவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்துள்ளது.

    இது குறித்த தகவல் தெரிந்த செல்வலிங்கம், தன் தங்கையுடனான இந்தத் தொடர்பை உடனடியாக கைவிடுமாறு சிலம்பரசனை பலமுறை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், சிலம்பரசன் அந்த உறவை முறித்துக்கொள்ள மறுத்தாராம்.. அத்துடன், அந்தப் பெண்ணையே தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு செல்வலிங்கத்திடம் வற்புறுத்தியுள்ளார்.

    தங்கையுடன் முறையற்ற உறவு

    இது செல்வலிங்கத்துக்கு மேலும் கொதிப்பை தந்துள்ளது.. தன் குடும்ப கௌரவத்திற்கு இழுக்கு நேரிடுவதையும், தங்கை மீதான ஈர்ப்பு குறையாமல் சிலம்பரசன் செயல்படுவதையும் கண்டு ஆத்திரமடைந்த செல்வலிங்கம், அவரை ஒரேடியாக தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    Advertisement

    இந்த கொடூர செயலை நிறைவேற்ற சிலம்பரசனுக்கே நெருங்கிய நண்பர்களான மாரிமுத்து மற்றும் ரமேஷ்கண்ணன் ஆகிய 2 பேரின் உதவியை செல்வலிங்கம் நாடினார்.. திட்டமிட்டபடி கடந்த 15ம் தேதி இரவு, வெள்ளப்பட்டி கடற்கரைக்கு சிலம்பரசனை மது அருந்த அழைத்தனர். நண்பர்கள் என்பதால் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் சிலம்பரசன் பீச்சுக்கு சென்றுள்ளார்..

    அங்கு காத்திருந்த மாரிமுத்து, ரமேஷ்கண்ணன் இருவரும் திட்டமிட்டு அளவுக்கு அதிகமாக மது ஊற்றி தந்து குடிக்க செய்துள்ளனர்.. போதையின் உச்சத்தில் இருந்த சிலம்பரசனைத் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட செல்வலிங்கம் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, படகு துடுப்பால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

    Advertisement

    காட்டி தந்த போஸ்ட் மார்ட்டம்

    இதில் ரத்தம் சொட்ட சொட்ட சம்பவ இடத்திலேயே விழுந்தார் சிலம்பரசன்.. எனினும், ஆதாரங்களை மறைக்க வேண்டும் என்பதற்காக சிலம்பரசனை 3 பேரும் சேர்ந்து தூக்கிக் கடலில் வீசினர்.

    இறுதியில், இந்த கொலைக்கு உதவிய மாரிமுத்து மற்றும் ரமேஷ்கண்ணன் ஆகிய இருவருக்கும் பணத்தை அள்ளித் தெளித்த செல்வலிங்கம், அவர்களைத் தலைமறைவாக இருக்க குற்றாலம் அனுப்பி வைத்தாராம்.. இதற்கு பிறகுதான் கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியிருக்கிறது.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, செல்போன் சிக்னல்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களை கையும் களவுமாக போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்..

    Advertisement

    அப்போதுதான் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.. தங்கையுடனான முறையற்ற உறவைத் தடுக்க அண்ணன் செல்வேந்தரன் தங்களிடம் உதவி கேட்டதால், இவ்வாறு கொலை செய்தததாக வாக்குமூலம் தந்தனர்.. இப்போது செல்வலிங்கம், மாரிமுத்து, ரமேஷ்கண்ணன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    Unimaginable twist in Ramanathapuram! Brother Breaks Down Over Friend’s Illicit Relationship With Sister