ராமேஸ்வரம்: உத்தரகண்டில் இருந்து கங்கை நீரை தோளில் சுமந்தபடி 3500 கிலோ மீட்டர் தூரம், 86 நாட்கள் பாதயாத்திரையாக பயணித்து ராமேஸ்வரத்திற்கு வட மாநிலத்தை சேர்ந்த சிவபக்தர் ஒருவர் வந்தடைந்துள்ளார்.
உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்து "சிவனை தேடி" ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மகாதேவ் சின்டா என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரியில் இருந்து இந்துக்களின் புண்ணிய தீர்த்தமான கங்கை நீருடன் பாதை யாத்திரையாக ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டனர்.
உத்தரகாண்டில் இருந்து பாத யாத்திரையாக புறப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த ராஜ்தாஸ், ஜெய்மட்டி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து சுமார் 3,500 கிலோ மீட்டர் தோளில் கங்கை தீர்த்தத்தை சுமந்தபடி 86 நாட்கள் பாத யாத்திரையாக நேற்று ராமேஸ்வரம் வந்தடைந்தனர். ராமேஸ்வரம் வந்த அவர்கள் தோளில் சுமந்த படி எடுத்து வந்த கங்கை தீர்த்ததால் இரவு ராமநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மேலும் இவருக்கு உதவியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் உடன் வந்துள்ளனர். சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் தோளில் கங்கை நீரை சுமந்தபடி வந்த வட மாநில பக்தர்களை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலாகும். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. இது தேவாரம் பாடல் பெற்ற 198 ஆவது தலமாகும். இந்த கோயிலின் மூன்றாவது பிரகாரம் உலகிலேயே நீளமானது. கோயிலை சுற்றி 22 புனித கிணறுகள் உள்ளது. இதில் நீராடினால் பாவம் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு தோஷங்கள் நீங்கவும் இங்கு தர்ப்பணங்கள் செய்யப்படுகின்றன. ராமநாத சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள புனித கடலில் நீராடுவது பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு குறிப்பிட்ட தூரத்திற்கு அலைகளே வராமல் ஏதோ ஆற்றில் நீராடுவது போல் இருக்கும். இந்த கடற்கரை மணலிலேயே தர்ப்பணங்கள் நடைபெறுகிறது. பொதுவாக அமாவாசை காலங்களில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசையின் போது லட்சக்கணக்கான மக்கள் திரண்டு புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்வது வழக்கம். எனவே ராமேஸ்வரம் புண்ணிய பூமியாகும்.மஹாளய அமாவாசை! ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயில்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்
வரிசையாக வந்த உலக தலைவர்கள்.. பின்னால் ராமேஸ்வரம் கோயில்! உலக கவனம் பெற்ற தமிழ்நாட்டு கோயில்