ராமநாதபுரம்: பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் காவலர், அருகில் சண்டையிட்ட இளைஞர்களை தடுத்தபோது, அவர்கள் பெண் காவலரை தள்ளிவிட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச் சம்பவம் பெரும் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி சரக போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் கண்ணகி (35). இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.
பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பெண் காவலாக பணியாற்றி வந்தார் . பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பணி ஒதுக்கப்பட்டு பணியில் இருந்தார். இந்த நிலையில் பரமக்குடி பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் சண்டையிட்டு கொண்டனர். இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். அப்போது மீண்டும் அரசு மருத்துவமனைக்குள் ஆட்டோ ஓட்டுநர்கள் இரு பிரிவுகளாக சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த கண்ணகி, அந்த இரு இளைஞர்களையும் தடுத்துள்ளார். அப்போது தலைமை காவலர் கண்ணகி, சண்டையிட்டுக் கொண்டவர்களை பிடிக்க முயன்றபோது அந்த நபர்கள் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை துரத்தி சென்றபோது தலைமை காவலர் கண்ணகியை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்து சுயநினைவின்றி இருந்த தலைமை காவலர் கண்ணகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ், பரமக்குடி டிஎஸ்பி சுகுமாரன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சண்டையிட்ட இளைஞர்களை சமாதானப்படுத்திய பெண் காவலர் தள்ளிவிட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்புராஜாவை (25) போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு தமிழக அரசு, 1 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும். உயிரிழந்து 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அரசு சார்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. உயிரிழந்த தலைமை பெண் காவலரின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதும் பெண் காவலர்களை துணைக்கு அனுப்பக் கூடாது. மருத்துவமனைகளில் ஆண் காவலர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். தாயின் உடலை பார்த்து அவரது குழந்தைகள் இருவரும் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.