ரியாத்: சவுதி அரேபியாவிற்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ரியாத் மற்றும் அபாவில் உள்ள 2 சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்கி உள்ள நிலையில் அங்கு வசிப்போருக்கு முக்கிய வார்னிங் வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்கும், ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. இந்த ஹவுதிகள் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஏமனின் சனா உள்பட சில முக்கிய இடங்களை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளன.
இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா, ஹவுதிகளை ஆதரிக்கவில்லை. அதேவேளையில் ஹவுதிக்களை எதிர்க்கும் ஏமனின் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா உள்ளது. இதுதான் இருதரப்பு மோதலுக்கும் முக்கிய காரணமாகும். தற்போது சவுதி அரேபியாவிற்கும், ஹவுதிகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஏமனில் ஹவுதிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களை அந்த நாட்டின் ராணுவத்துடன் சேர்ந்து சவுதி அரேபியாவின் ஆதரவு படைகளை சேர்ந்தவர்கள் பிடிக்க முயன்றனர். இது பதற்றத்தை உருவாக்கியது. ஏராளமான ஹவுதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுதிகள், சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை தொடங்கி உள்ளனர். அதன்படி இன்று சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்கியதாக ஹவுதிகள் கூறினர். இன்றும் சில இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ரியாத்தில் உள்ள வெளிநாடுகளின் தூதர்கள் தங்களின் தூதரகத்தை விட்டு வெளியே வரவேண்டாம். தூதரகங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கிங் அப்துல்லா நிதி மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை அவசரஅவசரமாக வெளியேற்றி வருகிறது. இதனால் ரியாத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் என்று 2 நாட்களும் ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையம், அபா சர்வதேச விமான நிலையங்களில் 2 தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலைய தாக்குதலில்சூடான் நாட்டை சேர்ந்தவர் பலியாகி உள்ளார். 8 பேர் காயமடைந்தனர். அதேபோல் அபா சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்ட்ட தாக்குதலில் மொராக்கோ மற்றும் அல்ஜிரியாவை சேர்ந்த 2 பெண்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஹவுதி தாக்குதல்.. சவுதி எடுத்த பிரமாஸ்திரம்! களத்தில் இறங்கிய பாகிஸ்தான் படைகள்