மெக்கா மசூதியில் ஒழுங்கீன செயல்.. 2 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை! என்ன நடந்தது

  • ரியாத்: சவுதி அரேபியாவின் மெக்கா பகுதியில் உள்ள மசூதியில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை குறித்து முன்கூட்டியே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று ஜெட்டாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    வளைகுடா நாடுகளில் முக்கியமானது சவுதி அரேபியா. எண்ணெய் வளம் கொண்ட இந்த நாட்டில் வேலை செய்ய தெற்காசிய நாடுகளில் இருந்து இளைஞர்கள் பலரும் செல்கிறார்கள். குறிப்பாக இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகளில் இருந்து இளைஞர்கள் அதிகம் செல்கிறார்கள்.

    Advertisement

    தண்டனை

    அப்படி செல்லும் இளைஞர்களில் பெரும்பாலானோர் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் திரும்பிவிடுகிறார்கள். ஆனால், சிலர் உள்ளூர் சட்டம் பற்றி புரிதல் இல்லாமல் எதாவது தவறு செய்து மாட்டிக் கொள்கிறார்கள். வளைகுடா நாடுகளில் எப்போதும் தண்டனை கடுமையாக இருக்கும் என்பதால் இவர்கள் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.

    மரண தண்டனை நிறைவேற்றம்

    இதற்கிடையே சவுதி உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சவுதி அரேபியாவின் மெக்கா பகுதியில் உள்ள மசூதியில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு அரசு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மெக்கா பிராந்தியத்தில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நசெருல் இஸ்லாம் அப்துல் பசீர், சிட்டி அக்தர் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி பாதுகாப்பு படையினர் இருவரையும் கைது செய்ததாகவும், விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்துள்ளது.

    சவுதி

    விசாரணையின்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீடு செய்த போதிலும் அதிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சவுதி அரசு உத்தரவின் அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமிய சட்டத்தில் உள்ள 'தஃசீர்' (Ta'zir) எனப்படும் நீதிமன்றத்தின் அதிகாரத்தின் அடிப்படையில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. குற்றத்தின் தீவிரத்தையும், இடத்தின் புனிதத்தன்மை மீறப்பட்டதையும் கருத்தில் கொண்டே மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    விவரம் இல்லை

    ஆனால் மசூதிக்குள் இருவரும் என்ன செய்தார்கள் என்பது குறித்து சவுதி அதிகாரிகள் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. சம்பவம் நடந்த மசூதியின் பெயர், இருவரும் எப்போது கைது செய்யப்பட்டனர் என்பன போன்ற தகவல்களும் வெளியிடப்படவில்லை. இதனால் வழக்கின் முக்கிய விவரங்கள் தெளிவாக தெரியவில்லை.

    அதேநேரம் வங்கதேசம் இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த மரண தண்டனை குறித்து முன்கூட்டியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணை தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், "இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ ஒப்புதலை பெறுவதற்காக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இலங்கை தமிழர்

    சமீபத்தில் இதுபோல தான் சவுதியில் இலங்கை தமிழரான சிவராசா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது சோஷியல் மீடியாவில் போட்ட ஒரு போஸ்ட் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு, இலங்கை அரசும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Saudi Arabia has executed two Bangladeshi nationals convicted of an offence at a mosque in the Mecca region(சவுதியில் அரங்கேறிய கொடூரம்): Saudi Arabia latest news in tamil.