சின்ன மீனை போட்டு, பெரிய மீனை பிடிக்கும் சவுதி.. யுரேனியம், F-35 ஜெட்! எல்லாமே கனெக்ட் ஆகுது பாருங்க

  • ரியாத்: சவுதி அரேபியாவில் மிக பெரிய அளவில் யுரேனியம் மற்றும் அரிய கனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, சவுதிக்கு அமெரிக்கா சுமார் 24.3 பில்லியன் டாலர் மதிப்பிலான 48 F-35 போர் விமானங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நகர்வுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது பரஸ்பர பேரம் பேசும் நடவடிக்கையா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    Advertisement

    முக்கிய வளைகுடா நாடான சவுதி இத்தனை ஆண்டுகளாக மிக பெரிய வளர்ச்சியை அடைய முக்கிய காரணமே கச்சா எண்ணெய் தான். இதற்கிடையே இப்போது கச்சா எண்ணெய்யை தாண்டி தனது பொருளாதாரத்தை பரவலாக்க சவுதி முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு ஆய்வு பணிகளை அமெரிக்கா தொடர்ந்து செய்து வருகிறது.

    Advertisement

    சவுதி

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அசிஸ் பின் சல்மான் சில முக்கிய கருத்துகளை கூறியிருந்தார். அதவது இஸ்லாத்தின் புனித நகரங்களில் ஒன்றான.. மதீனா அருகே உள்ள ஜபல் சயீத் பகுதியில் சுமார் 110 மில்லியன் டன் கனிம தாது இருப்பதாக தெரிவித்தார். இதில் அதிக அளவு அரிய மண் கனிமங்களும், யுரேனியமும் கூட இருப்பதாக கூறப்பட்டது.

    இது சுத்தமான யுரேனியம் அல்லது பதப்படுத்தப்பட்ட ரேர் எர்த் மெடல்களின் அளவு அல்ல. தாதுவில் இருந்து உண்மையில் எவ்வளவு கனிமங்களைப் பிரித்தெடுக்க முடியும் என்பது அதன் தரம், பிரித்தெடுக்கும் செலவு மற்றும் தொழில்நுட்பத்தை பொறுத்தே அமையும். இருப்பினும், இந்தளவுக்கு கனிம தாது என்பது மிக பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அமெரிக்க போர் விமானங்கள்

    சவுதின் இந்த அறிவிப்பு உலகையே திரும்பி பார்க்க வைத்த நிலையில், சில நாட்களில் மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது சவுதிக்கு 48 F-35 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்தது. தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் உபகரணங்கள், பயிற்சி, உதிரிப்பாகங்கள் என அதிநவீன விமானங்களை கொடுக்கவுள்ளனர். இந்த ஒப்பந்தம் முழுமையாக முடிந்தால்.. அமெரிக்காவின் அதிநவீன 5ஆம் தலைமுறை போர் விமானத்தை பெறும் முதல் அரபு நாடாக சவுதி மாறும்.

    இந்த போர் விமானங்கள் பிராந்திய ராணுவ சமநிலையை மாற்றாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம் அமெரிக்காவின் முக்கிய நேட்டா அல்லாத கூட்டாளி நாடான சவுதியின் பாதுகாப்பை இது மேம்படுத்த உதவும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேலை பாதுகாப்பது அமெரிக்காவின் நீண்டகால கொள்கையாக இருப்பதால், F-35 விற்பனை தொடர்பான அமெரிக்காவின் கருத்துகள் கவனத்தை பெற்றுள்ளன.

    Advertisement

    திடீர் மாற்றம்

    சவுதி ஏற்கனவே பல ஆண்டுகளாக F-35 விமானங்களை வாங்க முயன்று வருகிறது. இருப்பினும், முந்தைய அமெரிக்க அரசுகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சவுதியிடம் அதிநவீன ஆயுதங்கள் சென்றால்.. அது இஸ்ரேலுக்கு ஆபத்தாக மாறலாம் என்பதால் சவுதியிடம் இந்த ஆயுதங்களை தர அமெரிக்கா ரெடியாக இல்லை. இந்தச் சூழலில் தான் டிரம்ப் அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

    ஹவுதி

    தற்போதைய சூழலில் சவுதிக்கு மிக பெரிய தலைவலியாக இருப்பது ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பாகும். ஏமனில் ஹவுதிகள் செங்கடல் கடற்கரையின் முக்கிய பகுதிகளை கைப்பற்றியதுடன், பாப் எல்-மண்டெப் ஜலசந்தியிலும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவும் ஹவுதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் இதை உறுதி செய்துள்ளார். அதாவது ஹவுதிகளுடன் ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தும் அதேநேரம் இன்னொரு பக்கம் சவுதிக்கு ஆயுதங்களை சப்ளை செய்யவும் ரெடியாக இருக்கிறது.

    Advertisement

    அதேநேரம் F-35 போன்ற போர் விமானங்கள் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட நாடுகளில் நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தவே பயன்தரும். சிறிய ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் கெரில்லா உத்திகளை பயன்படுத்தும் ஹவுதிகளை சமாளிக்க இவை பயன் தராது என்பதே பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    சீனா

    மற்றொருபுறம் சீனா தலைமையிலான mBridge டிஜிட்டல் கரன்சி திட்டத்தில் இருந்து சவுதி விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக சர்வதேச பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த மே மாதம் நடந்த சோதனைக்கு பிறகு சவுதில் இதில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    பெரிய மீனை பிடிக்கும் சவுதி

    யுரேனியம் கண்டுபிடிப்பு, ஹவுதிகளுடனான அமெரிக்கா பேச்சுவார்த்தை, F-35 ஒப்புதல் மற்றும் சீனாவின் டிஜிட்டல் கரன்சி திட்டத்திலிருந்து சவுதியின் விலகல் ஆகியவை அடுத்தடுத்து நடந்திருப்பது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல.. சில விஷயங்களை விட்டு கொடுத்து சவுதி பெரிய விஷயங்களை சாதித்து வருகிறது.

    English Summary

    US has approved the potential sale of 48 F-35 fighter jets worth around $24.3 billion to Saudi Arabia(சவுதி அமெரிக்கா இடையே மிக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து): Saudi Arabia US biggest deal signed.