டிரோன் தாக்குதலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தால் வாழ்க்கையே காலி! சவுதி வாழ் இந்தியர்களுக்கு வார்னிங்

  • ரியாத்: சவுதி அரேபியாவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு சட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறிக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டடோக்களை சமூக வலைத்தளங்களில் பகிரவோ கூடாது என எச்சரித்துள்ளது.

    Advertisement

    மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒரு பக்கம் ஈரான்- அமெரிக்கா இடையேயான போர் பல மாதங்களால் முடியாமல் நீடிக்கிறது. டிரம்ப் போர் நிறுத்தம் இப்போது வந்துவிடும்.. அப்போது வந்துவிடும் என சொன்னாலும் கூட அது நீடித்துக் கொண்டே இருக்கிறது.

    Advertisement

    சவுதி அரேபியா

    அதேபோல இன்னொரு பக்கம் சவுதி மீது ஹவுதி படைகளும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. ஏமனில் உள்ள ஹவுதி படைகள், ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்களாக உள்ளன. அவை சமீப காலமாக சவுதி மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது

    இப்படி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்டது. அதில் சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் சட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏவுகணை & ட்ரோன்கள்

    அதேபோல ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதை முறியடிக்கும் வீடியோக்களின் போட்டோக்கள் அல்லது வீடியோக்களை வெளியிடுவது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கலாம் என சவுதி அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். அது தொடர்பான போஸ்ட்டையும் பகிர்ந்துள்ள இந்திய தூதரகம், அங்குள்ள இந்தியர்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைக் கவனித்து, விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    Advertisement

    சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படைகள் கடந்த 12 மணி நேரத்திற்குள் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஒரு க்ரூஸ் ஏவுகணை மற்றும் இரண்டு ட்ரோன்களை இடைமறித்துள்ளன. ரியாத் நகரை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றையும் சவுதி படைகள் இடைமறித்து அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் காரணமாக முக்கிய பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளும் தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதால், பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கடும் பாதிப்பு

    இதற்கிடையே சவுதிக்கு செல்லும் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் நவம்பர் 7ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன. ஜெட்டாவுக்கான விமானச் சேவைகள் அக்டோபர் 31 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஜெட்டா மற்றும் மெக்காவில் செயல்படும் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் விமான சேவை பாதிப்பால் சிரமப்படும் இந்தியர்களுக்கு ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் உதவி செய்து வருகிறது. தேவைப்படும் இடங்களில் உணவு, அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட உதவிகளையும் தன்னார்வலர்களும் வழங்கி வருகின்றனர்.

    மீண்டும் விமான சேவை

    இதற்கிடையே ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இன்று உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான சேவை தொடங்கினாலும் கூட தாக்குதல்கள் முழுமையாக நின்றால் என்றால் மட்டுமே பயணிகள் தைரியமாக பயணங்களை மேற்கொள்வார்கள்.

    English Summary

    Indian Embassy has urged Indians in Saudi Arabia to remain vigilant, follow local laws and avoid sharing photos or videos(சவுதி அரேபியாவில் அதிகரிக்கும் பதற்றம்): Saudi Arabia Missile Attacks latest news in tamil.