சவுதி அரேபியா உம்ரா விசா விநியோகம் எப்போது தொடக்கம்? மக்கா புனித தளத்திற்கு செல்வோர் கவனம்!

  • ரியாத்: இஸ்லாமியர்களின் புனித நகரமாக அறியப்படும் மக்காவிற்கு புனித உம்ரா பயணம் செல்லத் திட்டமிடும் சர்வதேச இஸ்லாமியப் பயணிகளுக்கு ஒரு மிக முக்கியமான அறிவிப்பை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது. 2026-27-ம் ஆண்டுக்கான புதிய உம்ரா காலண்டரை வெளியிட்டுள்ள சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், அதற்கான விசா விநியோகம் வரும் மே 31ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    Advertisement

    முஸ்லீம்கள் அனைவருமே புனித யாத்திரைக்குச் செல்வது கடமையாகவே இஸ்லாம் மதத்தில் இருக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் ஹஜ் தொடங்கும் நிலையில், மெக்கா, மதீனாவுக்கு செல்வோர் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருக்கும். இந்தியாவில் இருந்தே ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் ஹஜ் புனித யாத்திரை செல்வார்கள்.

    Advertisement

    உம்ரா விசா

    அதேநேரம் ஹஜ் பயணக் காலம் இல்லாத நேரத்திலும் கூட பலரும் புனிதத் தலங்களுக்குச் செல்ல சவுதி வருவார்கள். அவர்களைக் கருத்தில் கொண்டு சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான் உம்ரா விசா தொடர்பாக சவுதி மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேசப் பயணிகள் தங்களின் பயணம் மற்றும் தங்குமிட வசதிகளை எவ்விதத் தாமதமுமின்றி முன்கூட்டியே திட்டமிடுவதற்கும், மக்காவிற்குள் சுமுகமாக நுழைவதை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இந்த அறிவிப்பை சவூதி அரசு வெளியிட்டுள்ளது.

    புதிய சீசன்

    புதிய சீசனின்படி, சர்வதேசப் பயணிகள் ஜூன் 1ம் தேதி முதல் மக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். உம்ரா விசா வரும் மே 31ம் தேதி முதல் வழங்கப்படும்.. இந்தாண்டு பயணிகள் மக்காவிற்குள் ஜூன் 1ம் தேதி முதல் வரலாம்.. உம்ரா விசா வழங்குவதற்கான இறுதித் தேதி மார்ச் 9ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சவூதிக்குள் உம்ரா பயணிகள் நுழைவதற்கான கடைசி நாள் மார்ச் 23 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உம்ரா பயணிகள் சவூதியை விட்டு வெளியேற வேண்டிய இறுதி நாள் ஏப்ரல் 7 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    விசா பிராஸசிங்கில் ஏற்படும் தாமதங்கள் அல்லது பயணக் குளறுபடிகளைத் தவிர்க்க, பயணிகள் மற்றும் ஏஜெண்டுகள் இந்தத் தேதிகளைக் கட்டாயம் பின்பற்றுமாறு சவூதி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே சவூதி அரேபியா தனது ஆன்மீகச் சுற்றுலாவை டிஜிட்டல் மயமாக்கி வரும் வேளையில், இந்த ஆண்டும் கடுமையான விதிமுறைகள் அமலில் இருக்கும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ஒப்புதல் கட்டாயம்

    உம்ரா விசாவிற்கு விண்ணப்பிக்கும் பயணிகள் சவூதி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ நுசுக் உம்ரா (Nusuk Umrah portal) இணையதளம் வழியாகவோ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஹஜ் சீசன் இல்லாத இதர காலகட்டங்களில், சவூதி அரேபியாவிற்கு 'டூரிஸ்ட் இ-விசா' மூலம் வரும் பயணிகளும் கூட, உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்கு முன்பாக 'நுசுக்' (Nusuk App) செயலி மூலம் முறையாக உம்ரா அனுமதியைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஒவ்வொரு ஆண்டும் உம்ரா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் சவூதி அமைச்சகம் முன்கூட்டியே இந்தத் தேதிகளை அறிவித்துள்ளது. 'நுசுக்' செயலி மூலமான டிஜிட்டல் அனுமதி முறை, முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    English Summary

    Saudi Ministry of Hajj and Umrah officially announced the 2026-27 Umrah season calendar(உம்ரா 2026 காலாண்டரை வெளியிட்ட சவுதி): Saudi Arabia New Umrah Calendar latest news in tamil.