வழக்கம் போல நம்ப வைத்து ஏமாற்றிய பாகிஸ்தான்.. மரண அடி வாங்கும் சவுதி! உதவிக்கு வரும் முக்கியமான நாடு

  • ரியாத்: சவுதியை மீது ஏமனில் உள்ள ஹவுதி படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது சவுதிக்கு பெரும் தொல்லையாக மாறியிருக்கிறது. அவர்களின் முக்கிய ராணுவ பார்ட்னராக இருக்கும் பாகிஸ்தான் இந்த இக்கட்டான நேரத்தில் உதவிக்காக வராமல் கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் இஸ்ரேலின் உதவியை நாடியுள்ளனர்.

    Advertisement

    எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியா, ஏமனில் ஹவுதி போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலால் மிக பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. செங்கடல் கடற்கரை பகுதிகளிலும், பாப் எல்-மண்டெப் நீரிணையின் பெரும்பகுதியிலும் ஹவுதிகள் கட்டுப்பாட்டை கைப்பற்றியுள்ள நிலையில், சவுதிக்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட அதன் முக்கிய கூட்டாளிகள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இஸ்ரேலை ஒரு சுதந்திர நாடாக இதுவரை அங்கீகரிக்காத சவுதி அரேபியா, அமெரிக்கா வழியாக இஸ்ரேலிடம் உதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஹவுதிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக உளவுத்துறை தகவல் உதவியை சவுதி கேட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இஸ்ரேலிடம் உதவி கேட்ட சவுதி?

    இது தொடர்பாக சில தகவல்களை தி ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க சென்ட்காம் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஹவுதிகளுக்கு எதிராக சவுதி தன்னை தற்காத்து கொள்ளத் தேவையான உளவுத்துறை தந்து உதவுமாறு இஸ்ரேலிடம் சவுதி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    சவுதி பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், ஹவுதிகளின் தாக்குதலை எதிர்கொள்ள மற்ற வளைகுடா நாடுகள் மற்றும் எகிப்திடமும் உதவி கோரியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இஸ்ரேலுடனான சவுதியின் அணுகுமுறை நேரடியாக இல்லாமல், அமெரிக்க சென்ட்காம் வழியாக அமைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பாப் எல்-மண்டெப் நீரிணை தொடர்பான அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத்துறை தகவல்களை சவுதி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைவிட்ட பாகிஸ்தான்

    சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் சமீபத்தில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றையை கையெழுத்திட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். கிட்டத்தட்ட இஸ்லாமிய நோட்டோவை உருவாக்கும் அளவுக்கு ஒரு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டிருந்தனர். இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் மற்றொரு நாடு ராணுவத்தை அனுப்பி உதவ வேண்டும். அதன்படி சவுதி மீது ஹவுதி தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தனது படைகளை இறக்கியிருக்க வேண்டும்.

    Advertisement

    மவுனம்

    ஆனால், ஏமனில் ஹவுதிகளுக்கு எதிரான போரில் தனது ராணுவத்தை அனுப்புவதற்கு தயக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவின் பிரதேசத்தை பாதுகாக்க தனது படைகளை அனுப்ப முடியும் என்றும் ஆனால் வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் நேரடி போர் நடவடிக்கையில் பங்கேற்க முடியாது என்றும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது. அதாவது வழக்கம் போல பாகிஸ்தான் பல்டி அடித்து தனது பொறுப்புகளை கை கழுவி இருக்கிறது. இதன் காரணமாகவே இஸ்ரேலிடம் உதவி கேட்கும் சூழலுக்கு சவுதி தள்ளப்பட்டுள்ளது.

    பின்னணி

    சவுதி எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து அவ்வப்போது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்த ஹவுதிகள், கடந்த வாரம் திடீரென தாக்குதலை தீவிரப்படுத்தியது. செங்கடல் கடற்கரை பகுதிகளையும் பாப் எல்-மண்டெப் நீரிணையில் உள்ள தீவுகளையும் ஹவுதிக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகே சவுதி மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

    Advertisement

    இதிலல் பாப் எல்-மண்டெப் நீரிணை சவுதிக்கு முக்கியமான கடல் வழித்தடமாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்கனவே சிக்கல் நிலவும் சூழலில், சவுதி இந்த பாப் எல்-மண்டெப் வழியாகவே எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. இதையும் ஹவுதிக்கள் முடக்கினால் சவுதி நிலைமை மோசமாகும். இதன் காரணமாகவே எப்படியாவது ஹவுதிக்களை காலி செய்ய வேண்டும் சவுதி தீவிரமாக இருக்கிறது.

    English Summary

    Saudi Arabia has reportedly sought intelligence assistance from Israel(சவுதிக்கு உதவ மறுக்கும் பாகிஸ்தான்): Pakistan is not ready to help Saudi Arabia.