இந்தியாவுக்கு வார்னிங்.. சவுதி - பாகிஸ்தான் - துருக்கி உருவாக்கும் ‘சன்னி நேட்டோ' படை! ஷாக் பின்னணி

  • ரியாத்: சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இருந்து 'மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்' என்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தப்படி சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 3 நாடுகளில் யார் மீது தாக்குதல் நடத்தினாலும் அது மற்ற 2 நாடுகளின் மீதான தாக்குதல் என கருதி பதிலடிக்கு உதவி செய்ய வழிவகுக்கிறது. இது நம் நாட்டுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் நேற்று 'மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்' (Mecca Joint Defence Agreement) என்ற உடன்படுக்கை 3 நாடுகள் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இடையே கையெழுத்தாகி உள்ளது.

    Advertisement

    இந்த ஒப்பந்தம் பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேவேளையில் 3 நாடுகளும் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வது, இந்த 3 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டை எதிரிகள் தாக்கினால் பிற 2 நாடுகள் சேர்ந்து உதவி செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இருப்பினும் இது 'சன்னி நேட்டோ' அமைப்புக்கான முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. அதாவது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து 'நேட்டோ' என்ற படையை உருவாக்கி உள்ளன. இந்த படையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் படை வீரர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பில் உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் 'நேட்டோ' படை களமிறங்கி பதிலடி கொடுக்கும்.

    Advertisement

    அந்த வகையில் தான் துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சன்னி இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. இதனால் இந்த 3 நாடுகளும் இணைந்து 'சன்னி நேட்டோ' படையை முன்னெடுக்கும் முயற்சியாக இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி பாகிஸ்தான் 'டான்' பத்திரிகை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலகத்தை மேற்கொள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''இந்த ஒப்பந்தம் என்பது 3 நாடுகளில் அனைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் எதிராக ஒன்று சேர்வதை உறுதி செய்யும். 3 நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினாலும் கூட அது 3 நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்பட்டு பதிலடி கொடுக்க உதவி செய்யப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    அதன்படி இந்த 3 நாடுகளில் யார் மீது தாக்கினாலும் பிற 2 நாடுகள் உதவிக்கு செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. உதாரணமாக பாகிஸ்தானை நாம் தாக்கினால் இந்த ஒப்பந்தப்படி சவுதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நமக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது. இது நேரடியாக அல்லது மறைமுகமாக நடக்கலாம். இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Countries including Saudi Arabia, Pakistan, and Turkey have signed the ‘Mecca Joint Defense Pact.' Under this agreement, an attack on any one of these three nations is considered an attack on the other two, paving the way for mutual assistance in retaliation. This development is viewed as a complication for our country.