சவுதி அரேபியாவிற்கு போகாதீங்க.. ஹவுதிக்களால் அமெரிக்கா தந்த வார்னிங்

  • ரியாத்: சவுதி அரேபியா மற்றும் ஏமனின் ஹவுதிகள் இடையே மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவிற்கு யாரும் செல்ல வேண்டும். சவுதி அரேபியாவிற்கு செல்லும் முடிவை தள்ளிவைக்க வேண்டும் என்று அமெரிக்கா திடீரென்று அறிவித்துள்ளது.

    Advertisement

    ஈரான் - அமெரிக்கா இடையேயான போரின் தொடர்ச்சியாக தற்போது சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஹவுதிகள் ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிளர்ச்சி படையாகும். இந்த படை ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    சவுதி அரேபியா - ஈரான் இடையே ஏற்கனவே மோதல் போக்கு உள்ளது. இதனால் ஹவுதிக்களும், சவுதி அரேபியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. தற்போது சவுதி அரேபியா - ஹவுதிக்கள் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது.

    சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்கள் புனித இடமான மெக்காவை ஹவுதிக்கள் குறிவைத்து தாக்க திட்டமிட்டு ட்ரோன் அனுப்பியதாவும், அதனை சவுதி அரேபியா இடைமறித்து அழித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் சவுதி அரேபியாவிற்கு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா அறிவுரையுடன் வார்னிங் செய்துள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக அமெரிக்கா சார்பில் 'லெவல் 3' வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வார்னிங்கில் கூறப்பட்டுள்ளதாவது: ''ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள், சவுதி அரேபியாவை தாக்குவதாக அற மிரட்டல் விடுத்துள்ளனர். ஈரானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல்கள், ஆயுத மோதல்கள், பயங்கரவாதம், சுதந்திரமாக நடமாடுவதற்கான தடை மற்றும் சமூக வலைதள பயன்பாடு சார்ந்த விஷயங்களால் அச்சுறுத்தல் உள்ளது.

    வானிலேயே இடைமறிக்கப்படும் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின் குப்பைகள் கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். இதனால் அங்குள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக எனர்ஜி சார்ந்த உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் உள்ளிட்டவற்றின் அருகே தங்கியிருப்போர் மற்றும் பணி செய்வோர் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் ஏன் எல்லையையொட்டி உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    Advertisement

    சவுதி அரேபியாவில் பணியாற்றும் ஊழியர்கள் ஏமன் எல்லையில் இருந்து 20 மைல் தொலைவிற்குள் இருக்க வேண்டும். அதேபோல் கதிஃப் பகுதிக்கு தேவையின்றி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவிர ஜிசான், அசிர், நாஜ்ரண்ன, கதிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமெரிக்க அரசு ஊழியர்கள் செல்ல வேண்டும் என்றால் சிறப்பு அனுமதி பெற வேண்டும். தற்போதைய பதற்றத்தால் அமெரிக்கர்கள் சவுதி அரேபியா செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    'லெவல் 3' எச்சரிக்கை என்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில் அதிக குற்றச் சம்பவங்கள், அமைதியின்மை, பயங்கரவாதம், கடத்தல் அல்லது சுகாதார அவசரநிலைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும்போது வெளியிடப்படும். இதன் அர்த்தம் என்னவென்றால் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதாகும். அதேபோல் ஏமனின் சில இடங்களுக்கு 'லெவல் 4' வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. 'லெவல் - 4' வார்னிங் என்பது அந்த குறிப்பிட்ட இடத்துக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்பதாகும்.

    English Summary

    Tension with Saudi Arabia and the Houthi rebels in Yemen have escalated. Against this backdrop, the United States has suddenly announced that travel to Saudi Arabia should be postponed.