எல்லாம் சவுதி அரேபியாவிற்காக.. ஹவுதிகளுக்கு எதிராக களமிறங்கும் அமெரிக்க படைகள்? டிரம்ப் அதிரடி

  • ரியாத்: சவுதி அரேபியா மீது தொடர்ந்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் ஹவுதிகளை அடக்க டொனால்ட் டிரம்ப் தனது படையை இறக்குவது பற்றி பரிசீலனை செய்து வருகிறார். ஒருவேளை சவுதி அரேபியாவுடன், அமெரிக்க படைகள் கைகோர்த்தால் அது ஹவுதிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் டிரம்ப் எடுக்கும் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆதரவில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகள் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் ஏற்கனவே 2 முறை சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறிவைத்து ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகி உள்ளனர். விமானம் சேதமடைந்துள்ளது.

    Advertisement

    இதுபோதாது என்று நேற்று மீண்டும் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 10க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேர் ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.

    சவுதி ரியாத் ஏர்போர்ட் மீது ஏவுகணை தாக்குதல்.. பலர் காயம்! விமானங்கள் திருப்பி விடப்பட்டன.. ஒரே பதற்றம்

    ஹவுதிகளின் இந்த தாக்குதலால் சவுதி அரேபியா கடும் கோபமடைந்துள்ளது. ஹவுதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க சவுதி அரேபியா தயாராகி வருகிறது. இதற்கிடையே தான் சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக அந்த நாட்டின் நட்பு நாடான அமெரிக்கா களமிறங்குவது பற்றி பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெளியே ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதலில் சவுதி அரேபியாவுடன் கைகோர்ப்பீர்களா? என்ற கேள்வி அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப், ''நாங்கள் இணையலாம். அதுபற்றி பரிசீலனை நடத்த உள்ளோம். சமீபத்திய தாக்குதல் (நேற்றைய தாக்குதல்) பற்றி நாங்கள் இப்போது தான் அறிந்தோம். எனவே இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் நாங்கள் விரைவாக செயல்படுகிறோம்'' என்றார்.

    சவுதி விமான நிலையத்தில் ஷாக்.. ஹவுதிகளின் ஏவுகணை அட்டாக்கில் 12 பேர் உடல் சிதறி பலி – 300 பேர் காயம்
    Advertisement

    இதனால் ஹவுதிகளுக்கு எதிராக சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் நல்ல நட்பில் உள்ளன. சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் விமான தளம் அமைந்துள்ளது. பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க ஹவுதிகளுக்கும், அமெரிக்காவும் எதிரிகளாக இருக்கின்றன. ஹவுதிகள் ஈரான் ஆதரவில் செயல்படுவதோடு மட்டுமின்றி செங்கடல் பகுதியில் செல்லும் அமெரிக்க கப்பல்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களும் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளன.

    அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஹவுதிகளை குறிவைத்து அமெரிக்க கப்பற்படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் ஹவுதிகளை குறிவைத்து அமெரிக்கா அடிப்பதில் ஒன்றும் சிரமம் இருக்காது. ஆனால் அமெரிக்காவில் அடுத்த மாதம் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் டிரம்பின் கடந்த 2 ஆண்டு ஆட்சிக்கு கிடைக்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படும். இதனால் இந்த சமயத்தில் சண்டைக்குள் நுழைந்து அமெரிக்காவிற்கு பின்னடைவை ஏற்படுத்தினால் அது தேர்தலில் கூட எதிரொலிக்கலாம். இதனால் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் நன்கு யோசித்து தான் முடிவெடுப்பார் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

    English Summary

    The Houthis have been continuously launching attacks on Saudi Arabia. Amidst this situation, Donald Trump is considering deploying troops to rein in the Houthis. The decision Trump is contemplating has sparked significant interest, as any move by U.S. forces to join hands with Saudi Arabia would deal a devastating blow to the Houthis.