3 ஃபைல் மட்டும் இல்ல..திமுக ஆட்சியில் 20 துறைகளில் முறைகேடு! விஜய் ‘இதை’ செய்யனும்! அன்புமணி அட்வைஸ்

  • சேலம்: திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 3 துறைகளில் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகத் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் வேகமாக நடவடிக்கை எடுத்து, மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப்பு விழாவில் அக்கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் தாண்டி, 38 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் தனித்த இடம் உள்ளது.

    அன்புமணி ராமதாஸ்

    சமூகநீதி, நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாமக பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்தது பாமகதான். நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. 2031-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் உறுதியாக அமையும்; அதற்கான சூழல் தற்போது உருவாகி வருகிறது

    Advertisement

    பாமக

    சட்டமன்றத்தில் பாமக உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைத்துள்ளனர். பிற கட்சியினர் தனிநபர் விமர்சனங்களில் ஈடுபடும் நிலையில், தாங்கள் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் நேரலையில் பார்த்து வருவதால், பாமகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வேகம் காட்ட வேண்டும். காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிய வேகத்தில் செயல்பட வேண்டும்.

    முதலமைச்சர் விஜய்

    இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், இதுவரை கூட்டப்படவில்லை. தற்போது காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அமைதியாக இருந்துவிடக் கூடாது. கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்திற்கு வர வேண்டிய அளவில் தண்ணீர் வரவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி நீர் பங்கீட்டுக்கான அட்டவணைப்படி கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்

    Advertisement

    திமுக ஊழல்

    திமுக ஆட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அன்புமணி ராமதாஸ், மூன்று துறைகளில் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேகமாக நடவடிக்கை எடுத்து, மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    அரசு வாகன வசதி

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவது போல் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். அது நியாயமான கோரிக்கை. முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கும் வாகன வசதி உள்ள நிலையில், வாகன வசதி இல்லாதவர்களுக்கு அரசு வாகன வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், சிலர் பேருந்துகளில் பயணம் செய்வதால் அவர்களின் நேரம் வீணாகிறது. வசதி இல்லாதவர்களுக்கு வாகனம் வழங்குவதில் தவறில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

    English Summary

    Anbumani Ramadoss alleges corruption across over 20 departments under DMK rule and urges Vijay to act swiftly and restore public trust.