மேட்டூரில் நடந்த மேஜிக்! தடையை உடைத்து தமிழகத்தில் பாய்ந்த காவிரி.. அணையை திறக்கிறார் விஜய்!

  • சேலம்: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்காமல் இழுத்தடித்து வந்தது. ஆனால், கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் வேறு வழியின்றி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விரைவில் அணை திறக்கப்படலாம் என்றும், இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    அணையை திறக்க குறைந்தபட்சம் 90 அடி தண்ணீர் அவசியம். நேற்றிரவு நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.43 அடியாக இருக்கிறது. அணைக்கான நீர்வரத்து சீராக இருப்பதால், டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக விரைவில் அணை திறக்கப்படும் என்றும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பார் என்றும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    மேட்டூரில் ஆய்வு

    முதலமைச்சர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால், அணையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் அணையில் ஆய்வு மேற்கொண்டார். தண்ணீர் திறக்கப்படும் மேல் மதகு, வலது கரைப் பகுதி மற்றும் இடது கரையில் உள்ள 16 கண் பாலப்பகுதி.. ஆகியவற்றை பார்வையிட்ட குத்தாலிங்கம், பின்னர் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    டெல்டா பாசனம்

    ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இதனால் 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஜனவரி 28 வரை தண்ணீர் திறக்கப்படும். 239 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால், குறுவை சாகுபடி சிறப்பாக நடக்கும்.

    Advertisement

    ஆனால் இந்த ஆண்டு அணை திறக்கப்படவில்லை. அணையை திறக்க குறைந்தது 90 அடி தண்ணீர் இருக்க வேண்டும். அணைக்கான நீர் வரத்தும் சீராக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் கர்நாடகா காவிரி நீரை திறக்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் போதுமான அளவை எட்டவில்லை. எனவே தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தற்போது அணைக்கு நீர் வரத்து 10,807 ஆக இருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 50.87 டிஎம்சி ஆக உள்ளது. நேற்று சட்டப்பேரவையில் மேட்டூர் அணை குறித்து பேசிய நீர் வளத்துறை அமைச்சர் ஆனந்த், அணையிலிருந்து பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Karnataka had been delaying the release of the Cauvery water due to Tamil Nadu. However, with Karnataka's dams reaching full capacity, water has been released as there was no other option. Consequently, the inflow of water into the Mettur Dam has increased. Reports indicate that the dam may be opened soon and that Chief Minister Vijay will participate in the event.