குழந்தை கடத்தல்! அரசு மருத்துவமனை பிரசவ வார்டுகளில் இசட் பிளஸ் பாதுகாப்பு! பொன் மாணிக்கவேல் ஆவேசம்

  • சேலம்: குழந்தைகளை கடத்துபவர்களுக்கு 15 நாட்களில் தண்டனை வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிரசவ வார்டுகளில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சேலத்தில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சேலம் மாநகர் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறும் போது, மனித குலத்தின் ஆணி வேரையே அழிக்கும் வகையில் குழந்தை திருட்டு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    Advertisement

    திருடப்படும் பெரும்பாலான பெண் குழந்தைகள் பிச்சை எடுக்கவும் விபச்சாரத்திற்கும் ஒரு கும்பலால் ஈடுபடுத்தப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் வைத்தியசாலைகள் ஆஸ்பத்திரிகள் மற்றும் திருவிழாக்களில் கடத்தப்படுகின்றன.

    தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளில் சுமார் 13,000 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    ஆனால் இதில் காவல்துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. குழந்தைகள் காணாமல் போனால் மாயம் என்று வழக்கு பதிவு செய்வதோடு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

    இது தொடர்பாக நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டும் அதனை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை ஏழை எளிய மக்களின் குழந்தைகள் தான் அடிக்கடி காணாமல் போகின்றன.

    Advertisement

    காவல்துறையில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை மாறாக தகுதி இல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு 18 நாட்களில் தண்டனை வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என மொத்தம் தினசரி 12 குழந்தைகள் கடத்தப்படுகின்றன. குழந்தைகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளில் பிரசவ வார்டுகளில் இருந்தும் மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் கடத்தப்படுகின்றன.

    அவ்வாறு கடத்தப்படும் பெண் குழந்தைகள் 3 நாள் ஒரு இடத்தில் பிச்சை எடுக்கும். பிறகு அதே குழந்தை அந்த இடத்தில் பிச்சை எடுக்க வைக்கப்படுவதில்லை. 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்க போதை பழக்கத்தை கற்றுக் கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    Advertisement

    இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் அவர்கள் தூக்கி வீசப்படுகிறார்கள். இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் முதல்வர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை. அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் மகப்போறு வார்டுகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் குழந்தை கடத்தலை தடுக்க முடியும். அது போல் குழந்தை கடத்தலில் ஈடுபடுவோருக்கு 15 நாட்களில் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    English Summary

    Former Police IG Pon Manickavel demands to punish child traffickers within 15 days and Z Plus security to be given to all government hospital's labour ward.