சுற்றுலா பயணிகள் யாரும் ஏற்காடு வர வேண்டாம் - சேலம் ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்!

  • சேலம்: ஏற்காடு பகுதியில் மிக கனமழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் இன்று ஏற்காடு வருவதை தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மலைப்பாதைகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. ஏற்காடு மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

    Advertisement

    இன்று ஏற்காட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை காரணமாக மலைப் பாதைகளில் பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, ஏற்காடு மலைப்பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. சுற்றுலா தளங்களை மூடிய மாவட்ட நிர்வாகம்.. எங்கெங்கு செல்ல தடை?

    ஏற்காட்டில் மிக கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வர வேண்டாம். மலைப்பாதைகளில் நிலச்சரிவு, பாறைகள் உருண்டு விழும் அபாயம். உள்ளூர் மக்கள் மழையின் காரணமாக வாகனங்களில் பயணிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Advertisement

    அதேபோல், உள்ளூரைச் சேர்ந்த பொதுமக்களும் மழை நேரங்களில் வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்காடு செல்லும் சாலையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் காவல்துறையினருக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    “ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம்”.. நீலகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

    பொதுமக்கள் மழை பெய்யும்போது, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை தொட வேண்டாம். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதேபோல் நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளுக்கும் நாளை வரை சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று அப்பகுதிகளின் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Due to extremely heavy rainfall in the Yercaud region, the Salem District Collector has requested tourists to avoid visiting Yercaud today. Furthermore, traffic diversions have been implemented on the mountain roads to prevent any untoward incidents.