Neet Re Exam 2026: சேலம் நீட் மறுத்தேர்வு மாணவர்களுக்கு குட் நியூஸ்!

  • சேலம்: சேலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கடந்த மே 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்தான நிலையில் இன்று நீட் மறுத்தேர்வு நடைபெறுகிறது.

    Advertisement

    கடந்த மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த நிலையில் வடமாநிலத்தில் வினாத்தாள் கசிவு, முறைகேடு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக என்டிஏ அறிவித்தது.

    Advertisement

    இதையடுத்து ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுத்தேர்வு என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்விலும் முறைகேடு நடந்து விடக் கூடாது என்பதால் டெலிகிராம் செயலி நாடு முழுவதும் ஜூன் 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

    இதையடுத்து வினாத்தாள்களை தயாரிப்பதில் இருந்து அதனை அனைத்து மையங்களுக்கும் கொடுப்பது வரை அனைத்து ரகசியம் காக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மறுத்தேர்வுக்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாடு முழுக்க 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 இடங்களிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது.

    Advertisement

    5500க்கும் மேற்பட்ட மையங்களில் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் நீட் தேர்வு, மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 307 தேர்வு மையங்களில் 1.42 லட்சம் மாணவ- மாணவியர் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

    சென்னையில் மட்டும் 42 மையங்களில் சுமார் 21,000 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இதில் சேலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, சேலம் அரசு கலைக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, சின்ன திருப்பதி ஜெயராம் பப்ளிக் பள்ளி, செவ்வாய்பேட்டை, அயோத்தியாபட்டினம், அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி மற்றும் கொண்டலாம்பட்டி பகுதிகளில் உள்ள பிரபல மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    சேலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சின்னசேலம்-சேலம் மற்றும் திருப்பத்தூர்-சேலம் இடையே நாளை (ஜூன் 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சின்னசேலத்தில் இருந்து நாளை காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 11.20-க்கு சேலம் வந்தடையும். அதேபோல, திருப்பத்தூரில் இருந்து ஞாயிறு காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 10.45-க்கு சேலம் வந்தடையும். இந்த சேவையினை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English Summary

    NEET Retest 2026 (நீட் தேர்வுக்காக சேலத்தில் சிறப்பு ரயில்கள்) will be supported with special train services in Salem today, railway officials announced, following the cancellation of the May 3 examination and conduct of the re-exam.