சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி

  • சேலம்: சேலம் மாநகரப் பகுதியில், சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வைத்தே மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் மணிகண்டன் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி சம்பவத்தைப் போல பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. என்ன நடந்தது சேலத்தில்?

    Advertisement

    சேலத்தை அடுத்த நெய்காரப்பட்டி புத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தவெக மணிகண்டன் மீது சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு அதிரடி புகார் மனுவை அனுப்பியிருந்தனர்.

    Advertisement

    சேலம் மணிகண்டன் லீலைகள்

    அந்த மனுவில், மணிகண்டன் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திக்கொண்டே, பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் குட்கா, பான்பராக் போன்ற போதைப்பொருட்களை ரகசியமாக விற்று வருகிறார். ஏற்கனவே இவர் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் இருக்கும் நிலையிலும், தொடர்ந்து இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதோடு நிறுத்தாமல், பல பெண்களை ஏமாற்றி, ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு வைத்துக் கொண்டு, அதைத் தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி மிரட்டி வருகிறார்" பொதுமக்கள் அந்த புகாரில் வெடியைப் போட்டனர்.

    Advertisement

    விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் பேசும் ஆடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்துவிட்டது.

    கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண், வட்டிப் பணக் கொடுமையால் சேலம் பால்மார்க்கெட் பகுதியில் டூவீலரில் நின்றபடி அழுதுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், ஆறுதல் சொல்வது போல நடித்து, பைனான்ஸ் மூலம் பணம் வாங்கித் தருவதாக சொல்லி, அந்தப் பெண்ணின் போன் நம்பரை வாங்கியுள்ளார். அதற்கு பிறகு எந்நேரேமும் வாட்ஸ்அப் காலில் பேசி வந்த மணிகண்டன், அந்தப் பெண்ணை ஓமலூர் மற்றும் மேட்டூர் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பழகியுள்ளார்.

    Advertisement

    50 பெண்கள் ஆபாச வீடியோ

    ஒருமுறை ஓமலூர் ரூமில் மணிகண்டன் பாத்ரூம் சென்றபோது, அவரது போனை எடுத்துப் பார்த்த அந்தப் பெண் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனாராம்.. காரணம், அந்தப் போனில் சுமார் 8000 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. அதில் 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் மணிகண்டன் வீடியோ காலில் ஆபாசமாக பேசுவதும், உடலுறவு கொண்ட வீடியோக்களும் இருந்ததைக் கண்டு பயந்துபோன அந்தப் பெண், அவரிடமிருந்து உடனடியாக விலகியுள்ளார்.

    ஆனாலும் மணிகண்டன் அந்தப் பெண்ணை சும்மா விடவில்லை. கடந்த சில நாட்களாக மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டு, பழையபடி தன்னிடம் பழக வேண்டும் என்றும், இல்லையென்றால் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

    Advertisement


    உல்லாச வீடியோ சிக்கியது

    அதுமட்டுமல்லாமல் தன்னிடம் பழகியது போலத் தனது நண்பர்களுடனும் பழக வேண்டும் என்று கூறி விபசாரத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளார். தன்னைப்போல பல பெண்கள் இவனால் சீரழிந்துள்ளதாக அந்தப் பெண் ஆடியோவில் கதறியிருந்தார்.

    இந்த ஆடியோ ஆதாரம் வைரலான உடனே, சேலம் மாநகர கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் அதிரடியாகக் களம் இறங்கினார்கள்.. மணிகண்டனின் வீட்டைச் சுற்றி வளைத்து அவரை பிடித்து, ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையும் நடத்தினார்கள்.

    சேலத்தில் பரபரப்பு

    அவரது செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது, 3 பெண்களுடன் அவர் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் ஒரு பெண்ணுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசுவது போன்ற வீடியோவும் சிக்கின.. . இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் புகாரைப் பெற்று, மணிகண்டனை இரவோடு இரவாக கைது செய்த போலீசார் அவரைச் சிறையில் அடைத்தனர்.

    Advertisement

    50 பெண்களின் ஆபாச வீடியோ இருப்பதாக தெரிவித்துள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனராம்.. தவெக பிரமுகரின் இந்த செயல், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது...!!

    English Summary

    Prostitution Case in Salem! 50 obscene videos recovered! How TVK Manikandan got caught! What happened really