ரேஷன் அரிசியை.. சன்னரக அரசினு சொல்லி விக்கிறாங்க! அமுதம் கடைகளில் பஞ்சாயத்து! மக்கள் அதிருப்தி!

  • சேலம்: அரிசி விலை உயர்வு காரணமாக சன்னரக அரிசி அமுதம் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், சன்னரக அரிசி என்று சொல்லி, கிலோ ரூ.30க்கு ரேஷன் அரிசியை கொடுக்கிறார்கள் என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாங்கிய அரிசியை திருப்பி கொடுத்து பணம் கேட்டதால் அங்காடிகளில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சன்னரக அரிசி கிலோவுக்கு ரூ.30-40 வரை உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி ரூ.100 வரை விற்கப்படுகிறது.

    Advertisement

    சாதாரண கிராமங்களில் ஒரு நாள் கூலி ரூ.500 தான். அதில் ரூ.100 அரிசி வாங்கவே போய்விட்டால், எப்படி குடும்பத்தை நடத்துவது? என்று மக்கள் புலம்புகின்றனர். அரிசி உற்பத்தி அதிகமாக நடக்கும் டெல்டா மாவட்டங்களிலும் இதே நிலைமைதான். "அரிசியை உற்பத்தி செய்யும் எங்களால் அந்த அரிசியை வாங்கி பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது" என்று மக்கள் புலம்புகின்றனர்.

    ஆரம்பத்தில் இதை அரசு ஏற்கவில்லை. இருப்பினும் நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த தமிழக அரசு, கூட்டுறவு அங்காடிகள், அமுதம் கடைகள் மூலம் சன்னரக அரிசியை குறைந்த விலைக்கு விற்பதாக அறிவித்தது. கிலோ ரூ.30 என அரிசி விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அரிசி விற்பனைக்கு வந்தது.

    Advertisement

    சேலத்தில் பழைய பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு அங்காடியில் இன்று சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டது. ஒரு நபருக்கு 5 கிலோ மட்டுமே என்று சொல்லப்பட்டது. இதை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், தவெக நிர்வாகிகளுக்கு மட்டும் 10 அள்ளி வழங்கப்பட்டது. அதேபோல, வரிசையில் கால் கடுக்க நின்று வாங்கிய அரிசியின் தரமும் நல்லாவேயில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    ரேசன் அரிசியை கொண்டு வந்து, சன்னரக அரிசி என்று சொல்லி கிலோ ரூ.30க்கு விற்கிறார்கள் என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாங்கிய அரிசியை திருப்பி கொடுத்து பணம் கேட்டதால், அங்காடியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    Advertisement

    அரிசி விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. பருவமழை பொய்த்தது, சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டாதது, அரிசி ஏற்றுமதி இவ்வளவு காரணங்கள் இருந்தாலும், அதையெல்லாம் சரி செய்ய வேண்டியது அரசின் பொறுப்புதான். அரிசி என்பது வாழ்வாதாரத்தின் அடிப்படை. இதன் விலையுயர்வு மொத்த மக்களையும் பாதித்திருக்கிறது. எனவே பிரச்சனையை உணர்ந்துதான் அங்காடிகளில் அரிசி விற்பனை செய்ய அரசு முன்வந்தது.

    ஆனால் இப்படி விற்கப்படும் அரிசியின் தரம் சரியானதாக இருக்க வேண்டும் என்பதையும் அரசு உணர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Ration Rice: Due to the rise in rice prices, the Tamil Nadu government had announced that fine-quality rice would be sold at 'Amudham' retail outlets. However, the public has alleged that instead of fine-quality rice, they are being provided with ration-grade rice, priced at Rs. 30 per kilogram. This has led to a commotion at the outlets, as customers attempted to return the rice