சேலம் விவசாயி மாணிக்கம் வீட்டுக்கே போன விஜய்..! திடீரென வாசலில் வந்து நின்ற முதல்வர்.. நடந்தது என்ன?

  • சேலம்: சேலம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து புறப்படும் வழியில் செய்த ஒரு சூப்பர் செயல், அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. விவசாயிகளை சந்தித்ததோடு நிற்காமல், திடீரென ஒரு விவசாயியின் வீட்டிற்குள்ளேயே சென்ற விஜய், அவர்களது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

    Advertisement

    முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார் விஜய்... இதற்காக சேலம் வந்த அவருக்கு மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Advertisement

    திறந்த வேனில் கையசைத்து..

    பட்டு வேட்டி, சட்டை என பாரம்பரிய உடையுடன் கலக்கலாக வந்திருந்தார் விஜய்.. திறந்த வேனில் நின்றபடி, விஜய் சென்றபோது, சாலையின் 2 பக்கமும் பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.. அவர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார் முதலமைச்சர் விஜய்..

    தொடர்ந்து மேட்டூர் நோக்கி சென்றபோது, வழியில் திரண்டிருந்த விவசாயிகளையும் கட்சி நிர்வாகிகளையும் பார்த்து விஜய் கையசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது விவசாயிகள் அவருக்கு பச்சை துண்டை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..

    சேலம் விவசாயிகள்

    விவசாயிகளுடன் நின்று விஜய் போட்டோக்களையும் எடுத்துக்கொண்டார். போட்டோ எடுத்தபோது, யாருமே எதிர்பாராத வகையில், டக்கென விவசாயிகளின் தோளின் மீது கை போட்டபடி அவர்களிடம் உரையாற்றினார்.. அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.. விவசாயத்தின் மீதான தனது கவனத்தை வெளிப்படுத்தும் வகையில், விவசாயிகளிடம் நெல் மணியையும் விஜய் பெற்றுக்கொண்டார்.

    Advertisement

    ஆனால், இந்த நிகழ்வுகளைவிட அடுத்ததாக நடந்த சம்பவம்தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்துவிட்டு திரும்பிய முதலமைச்சர் விஜய், மேட்டூர் அருகே உள்ள சின்னக்காவூர் பகுதிக்கு சென்றார். அங்கு விவசாயி மாணிக்கம் என்பவரின் வீட்டிற்கு திடீரென விஜய் சென்றார்.

    சிலிர்த்துப் போன மாணிக்கம்

    விவசாயியின் வீட்டிற்குள் சென்ற விஜய், அங்கிருந்த கால்நடைகள் மற்றும் கால்நடைத் தொழுவை பார்வையிட்டார். பிறகு விவசாயி மாணிக்கம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களது வேளாண் பணிகள் குறித்தும், விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் விஜய் கேட்டறிந்தார். சின்னக்காவூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    விஜய் வீட்டிற்கு வந்து சென்ற பிறகும்கூட மாணிக்கம் அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.. முதல்வர் திடீரென தங்களது வீட்டிற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக விவசாயி மாணிக்கம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நேரடியாக வீட்டிற்கு வந்து விவசாயிகளின் வாழ்க்கை முறையையும், கால்நடை வளர்ப்பையும் பார்த்து கேட்டறிந்தது அந்த பகுதி மக்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.

    ரோடு ஷோவில் திடீர் பரபரப்பு

    இதனிடையே, விஜய்யின் ரோடு ஷோவின்போது அவரது வாகனத்தின் முன்னே திடீரென தொண்டர் ஒருவர் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது.. அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக அவரை அப்புறப்படுத்திய நிலையில், விஜய் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டார்.

    Advertisement

    மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு ஒருபுறம் முக்கியத்துவம் பெற்ற நிலையில், விவசாயி வீட்டிற்குள் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடிய விஜய்யின் இந்த திடீர் சந்திப்புதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது....!!!

    English Summary

    Salem Farmer Manickam Home Visit.. Why Did CM Vijay Suddenly Walk Into His House?