10 துண்டா வெட்டி.. சிண்டெக்ஸ் தொட்டிக்குள் பெண் உடல்! சிலிர்த்துப் போன சேலம்! ஆக்ரா ரயில் பாணி?

  • சேலம்: சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவப்பு நிற சூட்கேஸுக்குள் துண்டிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே பாணியில் சேலத்தில் தண்ணீர் தொட்டியில் 10 துண்டுகளாக பெண்ணின் உடல் வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதனை போலீஸார் சோதனையிட்டபோது, தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்தது தெரியவந்தது.

    Advertisement

    இதுகுறித்து ஆக்ரா போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த சிவப்பு நிற சூட்கேஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது இளம் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்ததும், பின்னர் அந்த சூட்கேஸ் இல்லாமல் இருவரும் அங்கிருந்து வெளியேறியதும் பதிவாகியிருந்தது.

    இந்த கொலையை செய்தது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தி லஸ்கர் என்பதும் அதற்கு உடந்தையாக அவரது மனைவியான பகாபதி மாஜி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி மணிப்பூர் மாநிலம் காஷிபூர் பகுதியில் பதுங்கி இருந்தபோது அவர்களை கைது செய்தனர்.

    Advertisement

    இந்நிலையில் அதே பண்யில் ஒரு கொலை நடந்துள்ளது. சேலம் அரிசிபாளையம் குணபல ராமசாமி தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டின் மொட்டை மாடியில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டில் வசித்து வரும் பூசாரி ரமேஷ் சந்தேகமடைந்துள்ளார்.

    இதையடுத்து அவர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தண்ணீர் தொட்டியை திறந்து சோதனை செய்தபோது கடும் அதிர்ச்சியடைந்தனர். அதில் பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், இரண்டு மூட்டைகளில் கட்டி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    Advertisement

    கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் உதவியுடனும் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண் யார், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர், எப்போது கொலை செய்யப்பட்டார், உடலை இந்த வீட்டின் மொட்டை மாடிக்கு யார் கொண்டு வந்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    குறிப்பாக அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக யார் யார் வந்து சென்றனர், சமீபத்தில் யாராவது புதிதாக தங்கியிருந்தார்களா, வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகையாளர்களுக்கு ஏதேனும் சந்தேக நபர்கள் தெரிந்தவர்களா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் சேகரித்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமாக வாகனங்கள் வந்து சென்றுள்ளதா, மூட்டைகள் ஏதேனும் எடுத்துச் செல்லப்பட்டதா என்பதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியவந்த பிறகே இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் என போலீசார் சொல்கின்றனர்.

    English Summary

    Salem police investigate after a woman’s dismembered body was found dumped inside a rooftop water tank.