சேலம்: சேலம் அருகே தொழிலதிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு, கொள்ளை நடந்தது போல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. முதலில் நகைக்காக கணவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்து வெளியான தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கின.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சின்னபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. 45 வயதான இவர், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
செங்கல் மற்றும் சிமெண்டு கற்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சுஜிதாஸ்ரீ. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் சுஜிதாஸ்ரீ, தனது கணவரின் தங்கை பூங்கொடிக்கு போனை போட்டு, பதற்றத்துடன் பேசியுள்ளார். மகனுக்கு உடம்பு சரியில்லாததால், ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது மர்மநபர்கள் வந்து தனது கணவரை வெட்டிக்கொன்று விட்டு, தன்னுடைய நகைகளையும் பறித்து சென்றதாகவும் கதறி அழுதுள்ளார்.. இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு காரின் முன் சீட்டின் பூபதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடலில் பல வெட்டுக்காயங்கள் இருந்தன. ஆனால், சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட காரில் அதற்கான தடயங்கள் எதுவுமே தென்படவில்லை. அதுவும் இல்லாமல் நகைகள் பறிக்கப்பட்டதாக சொன்ன, சுஜிதாஸ்ரீக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் போலீசாரின் சந்தேகம் சுஜிதாஸ்ரீ மீதே திரும்பியது.. உடனடியாக சுஜிதாஸ்ரீயிடம் கணவரின் மரணம் குறித்து சந்தேகங்களை கேட்க துவங்கினார்கள்.. அப்போது அவர் அளித்த பதில்களை கேட்டு போலீசாருக்கு சந்தேகம்தான் அவர் மீது அதிகமானது.. சுஜிதாஸ்ரீ ஒவ்வொரு கேள்விக்கும் முன்னுக்குப்பின் முரணாக பதில்களை சொன்னார்.. இதனால் போலீசார் தங்கள் விசாரணையை தீவிப்படுத்தினார்கள்.. அப்போதுதான் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாயின.. அதாவது சுஜிதாஸ்ரீக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்களாடம்.. இவர்களில் பலருடன் கள்ளத்தொடர்பிலும் இருந்து வந்துள்ளார்.. குறிப்பாக கல்யாணம் ஆகாத இளைஞர்களை குறிவைத்து பழகி வந்திருக்கிறார்.. அப்படித்தான், அவரது வீட்டுக்கு எதிரே வசித்து வந்த, பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் சந்தோஷ் ராஜ் என்பவருடன் சுமார் 2 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார்.. இந்த விவகாரம் கணவர் பூபதிக்கு தெரியவந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்துக்கு முன்தினம் இரவும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சுஜிதாஸ்ரீ, பூபதியை கீழே தள்ளியதில் அவர் தலையில் அடிபட்டு மயங்கியுள்ளார். உடனே தனது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்ததாகவும், அப்போது இருவரும் சேர்ந்து பூபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவர் இறந்ததை உறுதி செய்ததை சுஜிதாஸ்ரீ, பூபதியின் உடலை காரின் முன் சீட்டில் உட்கார வைத்துள்ளார்.. பிறகு ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதன்பிறகுதான், கோவிலுக்கு சென்றபோது மந்திரித்து கயிறு கட்ட வந்ததாகவு, நகைக்காக மர்மநபர்கள் கணவரை கொலை செய்ததாகவும் சுஜிதாஸ்ரீ நாடகமாடியிருக்கிறார்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதையடுத்து சுஜிதாஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது...!!சேலம் தொழிலதிபர்
காரின் முன்பக்கம்
ஐடி காதலனும் உடந்தை
மனைவியின் டிராமா