சேலம்: சேலம் மாநகரையே நடுநடுங்க வைத்த அந்த விபரீத சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், குற்றவாளிகள் எங்கு ஒளிந்திருந்தாலும் காவல்துறை சும்மா இருக்குமா என்ன?. இந்த கொலை தொடர்பாக சேலம் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஒரு மிகப்பெரிய திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..! யாரு இந்த தேஜ்மண்டல்?
சேலம் அஸ்தம்பட்டி குமாரசாமிப்பட்டி பகுதியில் ஸ்பா மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்தவர் தேஜ்மண்டல்.. வங்கதேசத்தைச் சேர்ந்த இவர், பெங்களூரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.. பிறகு சேலத்தில் ஸ்பா சென்டர் நடத்தி வந்தார். சேலம் பள்ளப்பட்டி, சங்கர் நகர் பகுதியில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் நடத்தி வந்திருக்கிறார்..
இதற்காக குமாரசாமிப்பட்டியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.. அவரிடம் லப்லு, நிஷி, ஷீலா, ஓஷி உள்ளிட்டோரும் வேலை பார்த்து வந்தனர். இவர்களில் சிலர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தேஜ்மண்டல் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டது.. அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேஜ்மண்டலை யார் கொன்றது என்று தெரியாமல் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர். இந்நிலையில், 5 வருடம் கழித்து அந்த பகீர் பின்னணி உருவாகியிருக்கிறது! நிஷியை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட லப்லு என்பவர், தனது ஓனர் தேஜ்மண்டலத்துடனும் தவறான உறவு வைத்திருந்தாராம்.. ஒருகட்டத்தில், பெங்களூரில் வழக்கு ஒன்றில் லப்லுவும் நிஷியும் சிக்கி கொண்டபோது, அவர்களுக்கு தேஜ்மண்டல் உதவி செய்ய மறுத்துவிட்டாராம். போதாகுறைக்கு, ஸ்பா சென்டரில் இரவு பகலாக உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த பணத்திற்கும் சரியான சம்பளம் தராமல் தேஜ்மேண்டல் ஏமாற்றி வந்திருக்கிறார்.. காதலனின் கள்ள ஆட்டம் ஒருபக்கம், சம்பள பாக்கி மறுபக்கம் என ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற நிஷியும் லப்லுவும், தேஜ்மண்டலைத் தீர்த்துக்கட்டிவிட்டு அவரிடம் இருக்கும் நகை மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போட்டுள்ளனர்! கடந்த 2021, அக்டோபர் 15ம் தேதி, லப்லு, நிஷி, ஷீலா, ஓஷீ ஆகிய 4 பேரும் சேர்ந்து தேஜ்மேண்டலை வளைத்து பிடித்தனர். சேலையால் அவரது கை, கால்களை இறுக்கக் கட்டி, வாயில் துணியைத் திணித்து மூச்சுத்திணற அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.. ரத்தக் கறையோடும் சடலத்தோடும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, உடலை ஒரு பெரிய சூட்கேசிற்குள் அமுக்கி வைத்துவிட்டு, நகை, பணத்தோடு அங்கிருந்து நைஸாகக் கழன்றுகொண்டனர்! சில நாட்கள் கழித்து உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட, சேலம் அஸ்தம்பட்டி போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் கண்டனர். கொலைக்குப் பிறகு பெங்களூரு வழியாக தப்பிய இந்த கும்பல், சொந்த நாடான வங்கதேசத்திற்கே ஓட்டம் பிடித்தது. 5 ஆண்டுகளாகக் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாக வாழ்ந்த நிஷி, மீண்டும் ஆள் அடையாளத்தை மாற்றி ரகசியமாக இந்தியாவுக்குள் ஊடுருவினார். புனேவில் பதுங்கிய நிஷி, அங்கு கர்நாடகாவைச் சேர்ந்த பரசுராம் நாடார் என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டு, ஒரு பெண் குழந்தையோடு ஜாலியாக செட்டில் ஆகிவிட்டார். ஆனால், தவறு செய்தவர்கள் கண்டிப்பாக ஒருநாள் சிக்குவார்கள்தானே? அப்படித்தான் சேலம் மாநகர கமிஷனரின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படைக்கு நிஷி புனேவில் பதுங்கியிருக்கும் சீக்ரெட் தகவல் கிடைத்தது. தாமதிக்காமல் புனே பறந்த சேலம் தனிப்படை போலீசார், உள்ளூர் போலீஸார் உதவியுடன் நிஷியை அதிரடியாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். சேலத்திற்கு அழைத்து வரப்பட்ட நிஷி, இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கைதான நிஷி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தப்பியோடிய அவரது காதலன் லப்லு, ஷீலா மற்றும் ஓஷீ ஆகிய 3 பேரையும் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்!சேலம் அஸ்தம்பட்டி
மசாஜ் சென்டர் அழகி
சூட்கேஸில் அமுக்கப்பட்ட உடல்
சபாஷ் போலீஸ்