சேலம்: தங்கமணியிடம் நந்தினி திடீரென அறிமுகமாகி உள்ளார்.. நெருங்கி பழகி இனிக்க இனிக்க பேசியிருக்கிறார்.. பெரிய சம்பளத்தில் சமையல் வேலைக்கு கூப்பிடுகிறார்கள் என்று சொல்லி, தங்கமணியை அழைத்துள்ளார்.. அதையும் நம்பி தங்கமணி செல்ல.. அதற்கு பிறகுதான் இப்படியொரு பயங்கரம் நடந்துள்ளது. சேலம் மாநகர போலீசார் தொடர் விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
சேலம் மாநகர் அரிசிப்பாளையம் பகுதி குணபாலா ராமசாமி தெருவில் வசித்து வரும் கோவில் பூசாரி பெயர் ரமேஷ்.. கடந்த ஆகஸ்ட் 31, 2026ம் தேதி, ரமேஷ் வீட்டின் மொட்டை மாடியிலிருந்த குடிநீர்த் தொட்டியில் இருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசியது.
இதனால் குடும்பத்தினர் உடனடியாக மாடிக்கு சென்று பார்த்தனர்.. அப்போது தண்ணீர் தொட்டிக்குள் 2 சாக்கு மூட்டைகள் கட்டப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த பள்ளப்பட்டி போலீசாரும், தடயவியல் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டனர். தொட்டிக்குள் இருந்த சாக்கு மூட்டைகளைப் பிரித்து பார்த்தபோது, அதற்குள் பெண் ஒருவரின் உடல் கை, கால், மார்பு மற்றும் தலை என பல பகுதிகளாக துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் மூட்டைகளில் கட்டி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாகக் போலீசார் அந்த உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையையும் உடனடியாக ஆரம்பித்தனர்.. அப்போதுதான், கைப்பற்றப்பட்ட உடலின் கையில், "கணபதி, ராஜேந்திரன்" என்று பெயர் பச்சைக் குத்தப்பட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். உடனே இதை வைத்து துப்பு ஆரம்பமானது.. அடையாள குறிப்புகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை கொண்டதில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று உடலை அடையாளம் கண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி, தாதனூரைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் 2வது மனைவியான தங்கமணி (50) என்பது உறுதியானது. உயிரிழந்த தங்கமணி சமையல் வேலை உள்ளிட்ட மற்ற வீட்டு வேலைகளை செய்து வந்தாராம்.. சமீபத்தில் அறிமுகமான ஒருஇளம்பெண், அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள தனது சித்தி வீட்டில் சமையல் வேலை இருப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டி தங்கமணியை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற தங்கமணியை, அந்தப் பெண்ணும் அவரது 2 ஆண் நண்பர்களான மாலிக் பாட்சா, சிவராமன் ஆகியோரும் சேர்ந்து திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். பிறகு தங்கமணி அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியையும் பறித்து கொண்டுள்ளனர். கொலை செய்த விஷயம் வெளியில் தெரியாமல் இருக்கவும், சடலம் அடையாளம் காணப்படாமல் இருக்கவும், தங்கமணி சடலத்தை துண்டு துண்டாக வெட்டி அருகிலுள்ள வீட்டின் குடிநீர்த் தொட்டிக்குள் சாக்கு மூட்டைகளாகக் கட்டி வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளது விசாரணையில் அம்பலமானது.. இதையடுத்து தப்பிச்சென்ற 3 பேரையுமே போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.. கையில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து, தங்கமணியின் சடலத்தை போலீசார் அடையாளம் கண்டாலும், யார் இந்த கொலையை செய்தது என்பதற்கு எந்த க்ளூவும் உடனடியாக கிடைக்கவில்லை.. பிறகு தங்கமணியின் செல்போன் ஹிஸ்டரியை பார்த்தபோதுதான், கடைசியாக பேசியது நந்தினி என்ற 28 வயது பெண்ணின் பெயர் தென்பட்டது. தங்கமணிக்கு 10 நாட்களுக்கு முன்புதான், நந்தினி பழக்கமாகியுள்ளார். தங்கமணியிடம் நெருங்கி பழகியதே, இந்த 4 சவரன் நகைக்காக என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, 2 ஆண் நண்பர்களில் ஒருவரான மாலிக் மாட்சா, நந்தியின் காதலன் ஆவார்.. இப்போது போலீஸின் விசாரணையில் பிடியில் 3 பேரும் உள்ளனர்.. கொலை செய்ததை ஒப்புக்கொண்டு, போலீசாரிடம் வாக்குமூலமும் தந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "தங்கமணி தினமும் சேலத்திற்கு வீட்டு வேலைக்கு பஸ்சில் வரும்போது நந்தினி பழக்கமாகி உள்ளார். தங்கமணி அணிந்து வந்துள்ள தங்க நகைகளை பார்த்து நந்தினிக்கு ஆசை வந்துவிட்டது. அதனால் அதனை பறிக்க காதலன் மாலிக்பாட்சாவுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். அதன்படியே 28ம் தேதி தங்கமணியை ஒரு வீட்டுக்கு வேலை செய்ய அழைத்தார்கள் என்று சொல்லி அரிசிபாளையத்துக்கு நந்தினி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், காதலன் மாலிக்பாட்சாவை அழைத்துள்ளார். அவர் வந்ததும் 2 பேரும் சேர்ந்து, தங்கமணியை அடித்துக் கொன்று, 4 சவரன் நகையையும் எடுத்துள்ளனர்.. ஆனால், சடலத்தை வெட்டுவதற்கு இருவராலும் முடியவில்லை.. அதனால் நண்பன் சிவராமனை வரவழைத்து சடலத்தை வெட்ட சொல்லி உள்ளனர்.. சிவராமனும் கோழி வெட்டும் கத்தியால் தங்கமணியின் உடலை தலை, கை, கால் என 7 துண்டுகளாக வெட்டி, 3 சாக்குமூட்டைகளில் கட்டியிருககிறார். அதற்கு பிறகுதான், கோயில் பூசாரி ரமேஷ் வீட்டின் 2 தண்ணீர் தொட்டிகளிலும், கொலை செய்த வீட்டின் மாடியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டிக்கு அடியிலும் போட்டுவிட்டு தப்பி சென்றிருக்கிறார்கள்.. இப்போது 3 பேருமே கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்...!!சேலம் தங்கமணி
கணபதி ராஜேந்திரன்
இளம்பெண் + 2 ஆண் நண்பர்கள்
கையில் பச்சை
யார் இந்த நந்தினி?